சப்பாத்திக்கள்ளி பற்றிய தகவல்கள்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

🌵 தற்போது நாம் பயன்படுத்தாததும், மறந்த தாவரங்களில் சப்பாத்திக்கள்ளியும் ஒன்று.

🌵 கிராமங்களில் வயல் வரப்புகளிலும், காடுகளின் ஓரங்களிலும், நீரோடைகளின் ஓரங்களிலும் நாம் பார்த்திருக்க கூடிய ஒன்று சப்பாத்திக்கள்ளி.

🌵 சப்பாத்திக்கள்ளி முள் போன்ற செடியாக இருந்தாலும் இதன் பழத்தின் அழகும், நிறமும் தனிதான்.

🌵 சப்பாத்திக்கள்ளி பழத்தை கிராமப்புற மக்களின் விலையில்லா செரி பழம் என்றே சொல்லலாம்.

🌵 கள்ளி என்றதுமே கள்ளிப்பால் என நம்முடைய எண்ணங்கள் போகும். ஆனால் கள்ளிப்பாலும் நமது உடலில் தோன்றும் பல்வேறு நோய்களை போக்கும் சிறப்பு வாய்ந்தது என்பது பலரும் அறியாத உண்மை.

🌵 உலகில் சுமார் 2008 கள்ளி வகைகள் உள்ளன. கொம்புக்கள்ளி, கொடிக்கள்ளி, சதுரக்கள்ளி, திருகுக்கள்ளி, இரணக்கள்ளி, ஆகியவை மருத்துவத்தில் பயன் உடையதாக உள்ளது.

🌵 தண்ணீர் உள்ள மற்றும் வறண்ட நிலங்களில் தானாகவே வளரும் தன்மை கொண்டவை கள்ளிச்செடிகள்.

🌵 கொத்து கொத்தான வட்டவடிவ சதைப்பற்றுள்ள தண்டுகள் உள்ள இதில் மஞ்சள் நிற பூக்கள் அழகாய் பூத்திருக்கும்.

🌵 சிவப்பு நிற பழத்தின் மேல் புறத்தில் முள் இருக்கும். பழத்தின் நடுவில் முள் இருக்கும்.

🌵 கிராமத்து மாணவர்களின் விலையில்லா கனி கள்ளிப்பழம் என்றால் மிகையாகாது. இப்பழத்தின் நடுவில் பிளந்து முல்லை எடுத்து விட்டு பழத்தை சாப்பிடலாம்.

🌵 சப்பாத்திக்கள்ளி பழத்தை சாப்பிட்டால் கோடையில் வரும் வெப்ப நோய் அனைத்தும் தீரும்.

🌵 இதற்கு சப்பாத்திக்கள்ளியின் சதைகளை துண்டுகளாக்கி மிளகு தூள், சேர்த்து சாப்பிட்டால் உடலில் தங்கிய நஞ்சு முறியும்.

🌵 முள்ளை நீக்கி விட்டு சதையை விளக்கெண்ணெயில் வாட்டி முடக்குவாதத்திற்கு வைத்து கட்டி வந்தால் வாதம் தீரும்.

🌵 சாப்பாத்திக்கள்ளியின் பூக்களை வெயில் காலங்களில் வரும் கட்டியின் மீது கட்டு போட கட்டிகள் உடைந்து ஆறும்.

🌵 சாப்பாத்திக்கள்ளியின் இலைச்சாறு காது வலிகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்.

🌵 சிறிது தூரம் நடந்தால் கூட சிலருக்கு இரைப்பு வாங்கும். மேலும் அதனுடன் இருமலும் ஏற்படும். இத்தகைய ஈளை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சப்பாத்திக்கள்ளியின் இலையை வாட்டி பிழிந்த சாற்றுடன் தேன் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் நோய் தீரும்.

🌵 கக்குவான் இருமல் உள்ளவர்களுக்கு உடலின் ரத்த அளவு குறைந்து சோகையும் ஏற்படும். இவர்கள் இலைச்சாற்றுடன் சிறிது உப்பு போட்டு காய்ச்சி குடித்து வந்தால் நோய் தீரும்.

🌵 சப்பாத்திக்கள்ளியின் சதைப்பகுதியை, உணவில் சேர்த்து வர, அதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள், உடல் முழுவதும் செயல்பட்டு, உடலில் புற்று பாதிப்புகளை உருவாக்கக் கூடிய நச்சுக் கிருமிகளை அழித்து வெளியேற்றும் வல்லமை மிக்கது.

🌵 சப்பாத்திக்கள்ளியின் சதைப்பகுதி நீரை சுத்திகரிக்கும் தன்மைக் கொண்டது. நீரை சுத்திகரிக்கும் என்று சொல்வதை விட தூய்மையாக்கும் என்றே சொல்லலாம்.

Related Posts

Leave a Comment

Translate »