அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளப்படும் மாத்திரைகள் நஞ்சாக மாறுகின்றது

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளப்படும் மாத்திரைகள் நஞ்சாக மாறுகின்றது. ஒருசிலர் வீட்டில் ஒரு மினி மெடிக்கல் ஷாப்பே வைத்திருப்பார்கள்.

சளி, காய்ச்சல் என்று எந்த நோய் வந்தாலும் அவர்கள் வீட்டில் வைத்திருக்கும் மாத்திரைகளை வைத்து வைத்தியம் பார்த்துக் கொள்வார்கள். இது ஒருசில நேரங்களில் கைகொடுத்தாலும் பல நேரங்களில் காலை வாரிவிடும்.
☆ மருந்து மாத்திரைகளை பயன்படுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
1. ஒரு நோய் ஏற்பட்டால் அந்த நோய் உடனே தீரவேண்டும் என்பதற்காக ஓவர் டோஸ் எடுக்கக் கூடாது.
2. மருந்துகளை காலாவதி காலத்தை கவனமாக பார்த்து சாப்பிட வேண்டும். காலாவதியான மருந்து நஞ்சுக்குச் சமம். அதை சாப்பிடக் கூடாது.
3. அதே போல் ஒரு நோய் வந்து விட்டால் அது உடனே குணமாகாது. படிப்படியாக மருந்து மாத்திரை சாப்பிடுவதால் மட்டுமே குணமாகும்.
எனவே உடனடியாக குணமாக வேண்டும் என்பதற்காக தினமும் ஒரு டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுப்பது மிகவும் தவறு.
4. அலோபதி மருத்துவம் எடுப்பவர்கள் நோய் தீரும் அதே மருத்துவத்தை தொடரவும். அவ்வாறு இல்லாமல் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் என மாறி மாறி மருத்துவம் செய்வது ஆபத்து.
5. ஒவ்வாமை மருந்துகளை உடன் மருத்துவரிடம் சொல்லி தீர்வு காணவேண்டும். வேறு சரியான மருந்தைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும். ஒரு மருத்துவரிடமிருந்து வேறு மருத்துவரிடம் செல்லும்போது பழைய மருந்துச் சீட்டைக் கட்டாயம் காட்ட வேண்டும்.
6. ஒரு நோய்க்கு ஒருவர் சாப்பிடும் மருந்து இன்னொருவரும் சாப்பிடலாம் என்று சாப்பிடக் கூடாது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தையே ஒவ்வொருவரும் சாப்பிட வேண்டும்.
7. சாப்பாட்டுக்கு முன் சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டிற்கு முன்னும், பின் சாப்பிட வேண்டியதை பின்புந்தான் சாப்பிட வேண்டும்
8. சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், தைராய்டு, மனநோய்கள் ஆகிய நோய்களுக்கு நீண்ட நாள் மருத்துவம் எடுக்கும் நபர்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவில் மருத்துவமனைக்கு சென்று இதே மாத்திரைகளை தொடரலாமா? அல்லது வேறு மாத்திரைகளை எடுக்கலாமா? என்று டாக்டர்களிடம் அறிவுரை பெற்று கொள்ள வேண்டும்,.
9. ஆஸ்துமாவிற்கு மருந்து சாப்பிடும்போது, வயிற்றெரிச்சலுக்கான வலிக்கான மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.
9. பாலூட்டும் தாய்மார்கள் வலி நிவாரண மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் சாப்பிடக் கூடாது.
10. வலிப்பு நோய் உள்ளவர்கள் கட்டாயம் ஏற்படின் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் அறிவுரைப்படி செய்ய வேண்டும்

Related Posts

Leave a Comment

Translate »