எந்தெந்த உணவுகள் என்னென்ன நோய்களை விரட்டும்?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நோய் எதிர்ப்பு சக்தி கூட – சுக்கு காபி குடிக்க வேண்டும்.

பசியை தூண்டுவதற்கு– புதினா, வெற்றிலை, சீரகம், பிரண்டை தண்டு.
தொண்டை வலி – திப்பிலி, துளசி, புதினா, தூதுவளை.

கர்ப்பபை, சிறுநீரக கல்லடைப்பு – வாழைத்தண்டு, திராட்சை, மாதுளை விதைகள்.

முதுகுத் தண்டுவலி – அருகம்புல், உளுந்து அவியல், பப்பாளி.

பக்கவாதம் வராமல் தடுக்க – வெங்காயம், பூண்டு, சீரகம்.

இதய வியாதிக்கு – ரோஜாபூ, தாமரை, செம்பருத்தி, ஆவாரம்பூ.

வயிற்றுப் போக்கு – இஞ்சி, தேன், கசகசா, பொட்டுக்கடலை.

தலைச்சுற்றல் – சுக்குகாபி, கொத்தமல்லி, வேப்பிலை, வேதுபிடித்தல்.

காது வலி – தேங்காய் எண்ணையில் குப்பை மேனி, பூண்டு, வெற்றிலை, மருதாணி, எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து சூடு செய்து 2 சொட்டுகள் விடவும்.

வெள்ளை தேமல் – அருகம்புல், வேப்பம் பூ, மலை வேப்பம் பூ.

கருப்புத் தேமல் – குப்பை மேனி, எலுமிச்சம் பழம், மஞ்சள், வேப்பிலை, வெந்தய கீரை இவைகளை சேர்த்து அரைத்து பூசவும்.

ஆண்மை குறைவு – தென்னங்குருத்து, எள்வெல்லம், முருங்கை கீரை, காரட்.

புற்று நோய் – கோதுமை புல், முட்டை கோஸ், சுண்டைக்காய், வெள்ளை முள்ளங்கி, தேங்காய், தூதுவளை, பழங்கள்.

வாயுக் கோளாறு – புதினா, கருநொச்சி, உப்பலங்கொடி, இஞ்சி.

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் – அருகம்புல், வெற்றிலை, தாம்பூலம், மணத்தக்காளி, வெள்ளை அருகு.

உடல் அரிப்புக்கு – புழுங்கல் அரிசி ஊறவைத்த தண்ணீரில் தேங்காய், பால், குப்பை மேனி கலந்து குடிக்கவும்.

உடல் உஷ்ணம் – பூசணி, வாழைத்தண்டு, காரட் சாறு குடிக்கவும்.

உடலின் எடையை குறைக்க – அருகம்புல், பூசணி, வாழைத்தண்டு, எலுமிச்சம்பழச் சாறு குடிக்கவும்.

மாதவிடாய் கோளாறு – மூங்கில் குருத்து, மலை வேப்பம் பூ, குப்பை மேனி, மணத்தக்காளி.

நரம்பு தளர்ச்சி – அன்னாசிப் பழம், அரைக்கீரை, காரட், தூதுவளை, பச்சை காய்கறிகள்.

பல்வலி – கிராம்பு, குப்பை மேனி, கொய்யா இலை, அருகம்புல்.

குடல்புண் – பழங்கள், நெருஞ்சி இலை, பூசணிச்சாறு, அகத்தி கீரை, அருகம்புல், மணத்தக்காளி, குப்பை மேனி, வில்வம்.

கண்பார்வை அதிகரிக்க – வல்லாரை, கொத்தமல்லி, சீரகம், கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி கீரை.

ரத்த மூலம் – வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாதத்துடன் சாப்பிடவும்.

சிறுநீர் எரிச்சல் – வாழைத்தண்டு, பூசணிச்சாறு, பொன்னாங்கண்ணி கீரை.

தூக்கம் இன்மை – வல்லாரை, இஞ்சி, பூண்டு, வெங்காயம்.

ருசியின்மை – அருகம்புல், மலை வேப்பம்பூ, கீழாநெல்லி, பிரண்டை தண்டு.

மூட்டு வலி – அருகம்புல், தரைபசலை, முடக்கத்தான், வாத நாராயணா.

வறட்டு இருமல் – தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு, சுட்ட வெங்காயம்.

இளைத்த உடல் பெருக – உளுந்து அவித்து, பழங்கள், இயற்கை பால்.

மார்பு வலி – உளுந்தங்கஞ்சி, தாமரைப்பூ, குப்பை மேனி.

ஞாபக சக்தி – வல்லாரை, கீரை, காரட், மிளகு, மாதுளம் பழம்.

பற்று, படை, சொரி, சிரங்கு – ஆமணக்கு எண்ணையை சுட வைத்து

காக்காய் வலிப்பு – அருகம்புல், ஆடாதொடை, வல்லாரை.

தலைவலி – மருதாணி பத்து போடவும், கருநொச்சி தழை வேனு பிடிக்கவும்.

ரத்தச் சோகை – அருகம்புல், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி.

குதிகால் வலி – அருகம்புல், இஞ்சி, பூண்டு, வெங்காயம், மருதாணி.

விஷக்கடி – நாயுருவி, சிறியா நங்கை, மலை வேம்பு, வெள்ளருகு.

கால் ஆணி – மஞ்சள், மருதாணி, வசம்பு, வெற்றிலை பத்து போடவும்.

பாத எரிச்சல் – மருதாணி அரைத்து பத்து போடவும், இரண்டு பாதங்களையும் தண்ணீரில் 30 நிமிடங்கள் வைத்து இருக்கவும்.

அதிகவியர்வை – அருகம்புல், துளசி, மிளகு, வாழைத்தண்டு.

அதிக வீக்கம் – உப்பலங்கொடி, மணத்தக்காளி, ஆமணக்கு எண்ணையில் வதக்கி மேலே பற்று போடவும்.

Related Posts

Leave a Comment

Translate »