உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..! Raisins Benefits in Tamil..!

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உலர் திராட்சை நன்மைகள் (Raisins Benefits in Tamil):- உலர் திராட்சையில் ஏராளமான ஆற்றலும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.  குறிப்பாக உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் தேவையான அளவு சாப்பிட்டு வர உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். சரி இந்த உலர் திராட்சையை தினமும் சாப்பிட்டு வருவதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

உலர் திராட்சை நன்மைகள் (Raisins Benefits in Tamil): 1

உலர்திராட்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதால், கர்ப்பிணி பெண்கள் உலர்திராட்சையுடன் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும், ஒரு கிளாஸ் அருந்தினால் தங்களுக்கு பிறக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

உலர் திராட்சை பலன்கள்: 2

வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றப்பழம் உலர் திராட்சை. எலும்புகள் உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்து கால்சியம் தான். இந்த கால்சியம் சத்து உலர்திராட்சை பழத்தில் அதிகமாக உள்ளது.

எனவே வளரும் குழந்தைகள் தினமும் இரவு உறங்குவதற்கு முன் 10 உலர்திராட்சை பழத்தை பாலுடன் காய்ச்சி ஒரு கிளாஸ் அருந்திவர குழந்தைகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

உலர் திராட்சை நன்மைகள்: 3

தினமும் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் சிறிதளவு பெருங்காயத்துடன், உலர் திராட்சை பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்திவர உடல் வலி குணமாகும்.

உலர் திராட்சை பலன்கள்: 4

சில பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த, ஒரு சிறந்த மருந்தாக உலர் திராட்சை பயன்படுகிறது. 10 உலர் திராட்சை பழத்தை நீரில் ஊறவைத்து நன்றாக காய்ச்சி அருந்தினால் இந்த வயிற்று வலி பிரச்சனை சரியாகிவிடும்.

உலர் திராட்சை நன்மைகள்: 5

சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

Related Posts

Leave a Comment

Translate »