கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கொரோனா வைரஸ் குறிப்புகள்:-

coronavirus news in tamil / coronavirus symptoms and precautions:- பொதுவாக நோய் வருவதும் அதை குணப்படுத்தவோ அல்லது அவற்றை கட்டுக்குள் வைப்பதோ எப்போதும் நடைபெறும் நிகழ்வு தான்.

ஆனால் அந்த நோய்க்கான காரணம் அறிந்து அதை குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிப்பதற்குள் ஓராயிரம் உயிர்களாவது பலியாகிவிடுகிறது. அவ்வாறு தோன்றிய வைரஸ் நோய்களில் ஒன்று தான் கொரோனா வைரஸ்.

இந்த வைரஸ் நோயானது சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவில் வுகான் மாநிலத்தில் ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றார். அதிகப்படியான காய்ச்சல் அதை தொடர்ந்து மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாவதாக தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அவருடைய உடல் பலவீனம் அடைந்திருக்கிறது.

இதே போன்று மக்கள் தொடர்ந்து மருத்துவரிடம் வரும் போது மருத்துவர்கள் இது புதிய வைரஸால் ஒரு தொற்று பரவி இருப்பதை உணர்ந்து கண்டறிந்தார்கள்.

இப்படி சர்வதேச அளவில் அனைவரையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் (coronavirus symptoms and precautions), நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், அறிகுறிகள் (coronavirus symptoms and precautions) இருந்தால் என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பது குறித்து சீனா தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அவற்றை இப்பொழுது படித்தறிவோம் வாங்க.

கொரோனா வைரஸ் குறிப்புகள்..!

கொரோனா வைரஸ் வருவதற்கான காரணங்கள்:

சீனாவில் இருக்கும் மத்திய நகரம் வுகான் மாநிலம். இங்கு 1 கோடி 10 இலட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கிருக்கும் மக்களுக்குத்தான் இந்த வைரஸ் தொற்று தொடங்கியுள்ளது.

குறிப்பிட்ட இந்நகரத்திலிருந்து தொடங்கிய இந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் இந்த மாநிலத்தில் இருக்கும் மிகப்பெரிய இறைச்சி மற்றும் கடல் உணவுகள் கொண்ட சந்தைபகுதி என்று கண்டறிந்தார்கள்.

சீன நாட்டில் அதிகப்படியான விலங்குகளின் (ஆடு, கோழி தவிர பல தரப்பட்ட விலங்குகளையும்) இறைச்சியையும், கடல் வாழ் உணவுகளையும் சாப்பிடுகிறார்கள். இந்த இடத்தில் இருந்து தான் விலங்குகளை வெட்டி விற்பனை செய்யும் இடத்தில் பரவியிருப்பதாக கண்டறிந்துள்ளது சீனா.

இப்படி தான் விலங்குகளிடைருந்து மனிதனுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. இந்த வைரஸானது நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலை உண்டாக்குகிறது. இவை மனிதனிடமிருந்தும் மனிதனுக்கு பரவும் என்றும் சீனா தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது:-

கொரோனா வைரஸ் குறிப்புகள்:- விலங்குகளிடமிருந்து, விலங்குகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் எப்போது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதோ அப்போதே, மனிதரிடமிருந்து மனிதனுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவிவிடும் அபாயம் உண்டு. இதை சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் நோய் காற்றில் பரவும் தன்மை கொண்டது, இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், சளியை உமிழும் போதும் இந்தக் கிருமிகள் காற்று வழியாக கலந்து விடும். இதை சுவாசிப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் / coronavirus symptoms in tamil:-

கொரோனா வைரஸ் குறிப்புகள்:-

இந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்கான முக்கிய அறிகுறிகள் (coronavirus symptoms and precautions), உங்களை கொரோனா வைரஸ் தாக்க தொடங்கிருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் (coronavirus symptoms and precautions) இருக்கும் என்பதையும் சீனா தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் /ccoronavirus symptoms in tamil: 1

இந்த கொரோனா வைரஸ் தாக்கமானது முதலாவதாக மனிதனின் சுவாச குழாய் வழியாக சென்று மனிதனின் நுரையீரலை தான் தாக்குகின்றது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் / coronavirus symptoms in tamil: 2

அதன் பிறகு அதிகப்படியான காய்ச்சல், அதாவது உடல் வெப்ப நிலையை காட்டிலும் அதிக வெப்ப நிலையை கொண்டிருக்கும்.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் / coronavirus symptoms in tamil: 3

அடுத்த நிகழ்வு இருமல், சளி, ஜலதோஷம் அதாவது சுவாச குழலில் பிரச்சனையை ஏற்படுத்தும் போது, நம் சுவாச மண்டலத்தில் உள்ள செல்களில், வீக்கங்களை ஏற்படுத்தும். இதனால் இயல்பாக சுவாசிக்கும் தன்மை என்பது குறைக்கப்படுகிறது. இதனால் மூச்சுதிணறல் பிரச்சனை அதிகமாக ஏற்படும்.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் / coronavirus symptoms in tamil: 4

பின் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வு, உடல் வலி, வாயு வெளியேற்றம் மற்றும் பேதி போன்ற அறிகுறிகள் (coronavirus symptoms in tamil) ஏற்படும்.

இந்த அறிகுறிகளானது (coronavirus symptoms and precautions in tamil) தொடர்ந்து ஒரு மனிதனுக்கு 7 நாட்களில் இருந்து 27 நாட்கள் வரை தொடர்ந்து இருக்கிறது என்றால் அவர்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உறுதி செய்யப்படுகிறது.

இந்த பாதிப்பு அறிகுறிகள் (coronavirus symptoms and precautions) ஒரு மனிதனுக்கு தொடர்ந்து இருக்கிறது என்றால் அவர்களுடைய சிறுநீரகம் என்பது செயலிழக்கப்படுகிறது. இந்த சிறுநீரகம் செயலிழப்பு என்பது 7 நாட்களுக்குள் கூட ஏற்படலாம், அந்த அளவிற்கு மரணத்தை ஏற்படுத்த கூடியது கொரோனா வைரஸ் என்று சொல்லப்படுகிறது.

இந்த கொரோனா வைரஸ் குறிப்பாக முதியவர்களைத்தான் அதிகமாக தாக்குகின்றது. அதாவது சுவாச பிரச்சனை உள்ளவர்கள், இதய நோயாளிகளுக்கு இந்த வைரஸ் தோற்று அதிகமாக தாக்குகின்றது.

அதேபோல் கொரோனா வைரஸ் நன்கு ஆரோக்கியமாக உள்ள, அதாவது நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தைகள் மற்றும்  இளைஞர்களை தாக்குவது இல்லை.

சரி இந்த கொரோனா வைரஸ் நோயில் இருந்து நாம் தப்பிக்க நிறைய வழிகள் உள்ளது அதை பற்றி தெரிந்து கொள்வோமா…

தடுக்கும் முறை / coronavirus symptoms and precautions:

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க (coronavirus symptoms and precautions), தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு, நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும்.

எங்காவது வெளியே சென்று வந்தால் உடலை சுத்தம் செய்ய வேண்டும்.

அதேபோல் இந்த வைரஸ் நீர் குமிழிகள் மூலம் பரவும் தன்மை கொண்டது. எனவே தும்மல், இருமல் உள்ளவர்கள் அருகே செல்ல கூடாது. உங்களுக்கு தும்மல், இருமல் இருந்தால், முகத்தை மாஸ்க் கொண்டு மூடுவது நல்லது. என்95 மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும்.

கூட்டமாக இருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும்.

வவ்வால்களை தொடுவது, விலங்குகள் உடன் விளையாடுவது, சரணாலயங்களுக்கு செல்வது, ட்ரெக்கிங் செல்வதை சில நாட்களுக்கு தவிர்க்கலாம்.

அதேபோல் அதிக அளவு தாடி, முடி வைத்து இருந்தால் அதையும் சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது சிறப்பு.

தொடர்ந்து இருமல், தும்மல் இருந்தால் வெளியே செல்லாமல் உடனே மருத்துவரை அணுகிவிட்டு, வீட்டில் தனி அறையில் ஓய்வு எடுப்பது சிறப்பானது.

பொது இடங்களை தவிருங்கள்.

காய்ச்சல் இருந்தால் குறைந்தது 14 நாட்கள் தனியாக இருப்பது சிறந்தது.

Related Posts

Leave a Comment

Translate »