தாயின் கர்ப்ப பையில் கருவாக உருவாகி, 9 மாதத்தின் நிறைவில் சரியான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
அந்த வகையில், ஒரு சில குழந்தைகள் விரைவாகவே திரும்புதல், தவழுதல் போன்றவற்றை செய்யலாம். சில குழந்தைகள் சில மாதங்கள் கடந்தும் செய்யலாம். அது குழந்தைகளின் வளர்ச்சி நிலை பொருத்த விஷயமாகும்.
சரி இப்போது குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் (Child development) பற்றி தெளிவாக காண்போம் வாங்க..!
குழந்தை பிறந்த நாள் முதல் 6 வாரங்கள் வரை – குழந்தை வளர்ச்சி நிலை :
குழந்தை பிறந்த நாள் முதல் 6 வாரங்கள் வரையிலான குழந்தை வளர்ச்சி நிலை (kulanthai valarchi nilaigal) தலையை ஒருபுறமாக திரும்பியவாறு மல்லார்ந்து படுத்துகொண்டு இருக்கும்.
திடீரென ஏதாவது சத்தம் கேட்டால் குழந்தையின் உடல் சிலிர்த்து போகும்.கைவிரல்களை இறுக்கமாக மூடி கொண்டிருக்கும்.
குழந்தையின் உள்ளங்கையில் ஏதாவது ஒரு பொருளையோ அல்லது விரலையோ கொடுத்தோம் என்றால் இறுக்கமாக பிடித்து கொள்ளும். குழந்தை பிறந்த நாள் முதல் 6 வாரங்கள் வரை உள்ள குழந்தைகளின் வளர்ச்சி நிலையாகும் (Child development).
குழந்தை பிறந்த 6 முதல் 12 வாரங்கள் வரை – குழந்தை வளர்ச்சி நிலை :
கழுத்தை நன்றாக நிற்க வைக்கப் பழகும். பொருள்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கும். குழந்தை திடீரென அழுகும்.
இது குழந்தை பிறந்த 6 முதல் 12 வாரங்கள் வரை உள்ள குழந்தைகளின் வளர்ச்சி நிலை (Child development) ஆகும்.
குழந்தை பிறந்த 2-வது மாதத்தில் – குழந்தை வளர்ச்சி நிலை :
அசைவுகளை உணரும். அழுகையைத் தவிர சில சிறிய சத்தத்துடன் கத்தும். தாயின் அரவணைப்பை நன்கு உணர்ந்திருப்பர்.
இது குழந்தை பிறந்த இரண்டு மாதங்களுக்குரிய, குழந்தைகளின் வளர்ச்சி நிலை (Child development) ஆகும்.
மூன்று மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடுகள்:
தாயின் முகம் நன்கு அறிந்திருக்கும். குரல்களைக் கேட்டு அந்தப் பக்கமாகத் திரும்பும். அசைவுகளை உற்று நோக்கும்.
மல்லார்ந்து படுத்தவாறு தன் கைகள் மற்றும் கால்களை சீராக நன்கு அசைக்கும்.
அழுகை சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவித சத்தங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்தும்.
குழந்தையை நிற்க வைக்கும் பொழுது ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் கழுத்தை நேராக நிற்க வைக்கும். பிறகு பழைய நிலைமைக்கு கழுத்து வந்து விடும்.
அம்மாவை தவிர மற்றவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது.
இது மூன்று மாதங்கள் முழுமையான குழந்தைகளின் வளர்ச்சி நிலை (Child development) செயல்பாடுகள் ஆகும்
இரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கலா அப்படி என்றால் இதை பண்ணுங்க..!
குழந்தை பிறந்த 4-வது மாதத்தில்- குழந்தை வளர்ச்சி நிலை :
பிறந்த நான்கு மாதம் நிறைவடைந்த குழந்தைகள் நிறங்களை அறிந்திருக்கும். குழந்தைகளுக்கு கழுத்து நிற்க ஆரம்பிக்கும்.
கழுத்தை அவர்களாக திருப்பி அசைவுகளை கவனிப்பார்கள். அவர்களது பெயரை கூப்பிட்டால் அந்த திசையை நோக்கி திரும்புவார்கள்.
இது நான்கு மாதங்கள் முழுமையான குழந்தைகளின் வளர்ச்சி நிலை (Child development) ஆகும்
குழந்தை பிறந்த 6 மாதத்தில் – குழந்தை வளர்ச்சி நிலை :
இந்த நிலையில் குழந்தை தனது இரண்டு கைகளையும் தட்டி விளையாட ஆரம்பிக்கும்.
தன்னைச் சுற்றியுள்ள பகுதியில், மிக அருகில் இருந்து குழந்தை ஏதேனும் சத்தம் கேட்டால் சத்தம் வரும் பகுதியை நோக்கி தன்னுடைய தலையைத் திருப்பும்.
குழந்தை படுத்தவாக்கிலேயே உருண்டு கொண்டே செல்லும்.
தாய் மற்றும் பிறரின் உதவி இல்லாமலே உட்கார ஆரம்பிக்கும்.
குழந்தை நிற்கும் பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.
இது 6 மாதங்கள் முழுமையான குழந்தைகளின் வளர்ச்சி நிலை (Child development) ஆகும்
குழந்தை பிறந்த 8 மாதங்களில் – குழந்தை வளர்ச்சி நிலை :
பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். எந்த பொருளையும் வாயில் வைத்துக் கொள்ள முனைவார்கள்.
தானே உட்காருவார்கள். நிற்க வைத்தால் தள்ளாடிக் கொண்டே நிற்பார்கள்.
இது 8 மாதங்கள் முழுமையான குழந்தைகளின் வளர்ச்சி நிலை (kulanthai valarchi nilaigal) ஆகும்
குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் – குழந்தை வளர்ச்சி நிலை :
ஒரு அடி எடுத்து வைத்து நடப்பார்கள். அவர்களது பெயரைக் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தைகளாக பேசுவார்கள். தாய், தந்தையை அடையாளம் காட்டுவார்கள்.
இது 9 மாதங்கள் முழுமையான குழந்தைகளின் வளர்ச்சி நிலை (kulanthai valarchi nilaigal) ஆகும்
குழந்தை பிறந்த 12 மாதங்களில்:
ஒரு வயது நிரம்பும் போது முன்வரிசை பால் பற்கள் அனைத்தும் முளைத்திருக்கும். விழுந்து எழுந்து அவர்களாக நடப்பார்கள்.
பல வார்த்தைகளை அவர்களாகவே பயன்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச முயற்சிக்கும்.
பொருட்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டுவார்கள்.
குழந்தை எழுந்து நிற்கும், தாத்தா, பாட்டி, மாமா போன்ற வார்த்தைகளை சொல்ல ஆரமிக்கும். பிறரின் கைகளை பிடித்து கொண்டு நடக்கும்.
இது 12 மாதங்கள் முழுமையான குழந்தைகளின் வளர்ச்சி நிலை (Child development) ஆகும்
2 வருட குழந்தையின் செயல்பாடு:
விதவிதமான உடைகளை உடுத்தி கொள்ளும், கீழே விழாமல் ஓடிச் செல்லும், புத்தகத்தில் உள்ள படங்களை பார்க்க ஆசைப்படும். சொல்லி கொடுப்பதை திரும்ப சொல்ல பழகும்.
3 வருட குழந்தையின் செயல்பாடு:
இந்த பருவத்தில் மற்றவர் சொல்லி கொடுப்பதை திரும்ப சொல்ல ஆரம்பிக்கும். சின்ன சின்ன வேலைகளை செய்ய உதவும்.
ஏதாவது ஒரு நிறத்தின் பெயராவது சொல்லும். உடலில் உள்ள சில உறுப்புகளைக் காட்டி அதன் பெயரைக் கேட்டால் பெயர் சொல்லும்.
4 வருட குழந்தையின் செயல்பாடு:
ஏதாவது புதிதாக கற்றுக்கொள்ள நினைக்கும், மூன்று சக்கர வாகனத்தை தானாகவே நிமிர்த்தி ஓட்டும்
5 வருட குழந்தையின் செயல்பாடு:
துணிகளை உடுத்திக் கொள்ளும் பொழுது ஒரு சில பட்டன்களையாவது (பொத்தான்களை) போட்டுக்கொள்ளும்.
படிக்கட்டுகளில் பெரியவர்களைப் போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச் செல்லும்.
வார்த்தை உச்சகட்டங்களை நன்றாக உச்சரிக்கும்.
குழந்தைக்கு மருந்து கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை !!!