100 டிகிரிக்கும் மேலே கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க முடியாமல், ஆரோக்கியமானவர்களே தடுமாறும்போது, குழந்தைகளும் முதியவர்களும் எப்படி வெப்பத்தின் உக்கிரத்தைத் தாங்குவார்கள்? வெயிலின் கடுமை, குழந்தைகளையும் முதியவர்களையும் தாக்காத அளவுக்கு, அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் கோடையில் புத்துணர்ச்சி அளிக்கும் 7 வகையான பானங்கள் எப்படி தயார் செய்யலாம் வாங்க பார்ப்போம்.
Fruit custard recipe in tamil / summer drinks:-
தேவையான பொருட்கள்:
- பால் – 1/2 லிட்டர்
- custard powder – 2 ஸ்பூன்
- திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை, மாம்பழம் ஆகியவற்றை சிறிதளவு கட் செய்து வைத்து கொள்ளுங்கள்.
summer drinks / Fruit custard recipe in tamil செய்முறை விளக்கம்:
அடுப்பில் ஒரு காடாய் வைத்து அவற்றில் 1/2 லிட்டர் பசும் பால் ஊற்றி நன்றாக காய்ச்சி கொள்ளவும்.
பால் நன்கு கொதித்ததும் இரண்டு ஸ்பூன் custard powder-ஐ சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும்.
பின் அடுப்பை அணைத்து பாலினை நன்றாக ஆறவிடவும்.
பால் நன்கு ஆறியதும் ஒரு பவுலில் சேர்த்து ஊற்றி நறுக்கி வைத்துள்ள பழங்களை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இந்த கலவையை பிரிட்சியில் 2 மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
பின் தங்கள் குழந்தைகளுக்கு இந்த Fruit custard-ஐ அன்புடன் பரிமாறவும்.
இது வெயில் காலங்களில் செய்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
இரண்டாவதாக கிர்ணி பழம் ஜூஸ் (kirni juice recipe) செய்ய தேவையான பொருட்கள்:-
- கிர்ணி பழம் – பாதி
- சர்க்கரை – 2 அல்லது 3 ஸ்பூன்
summer drinks recipe in tamil:
செய்முறை:
Kirni juice recipe:- முதலில் கிர்ணி பழத்தின் தோலை சீவிகொள்ளவும்.
அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மிக்ஸ்யில் சர்க்கரை சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான கிர்ணி பழ ஜூஸ் தயார்.
இதனை பரிமாறும் போது ஐஸ் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம்.
இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேன் கூட சேர்த்துக்கொள்ளலாம்
ரோஸ் மில்க் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ரோஸ் மில்க் செய்ய (summer drinks recipe in tamil) தேவையான பொருட்கள்:
- காய்ச்சிய பால் – ஒரு கிளாஸ்
- பிங்க் புட் கலர் – 3/4 தேக்கரண்டி
- ரோஸ் எசன்ஸ் – 3/4 தேக்கரண்டி
- தண்ணீர் – 1/2 கப்
- சர்க்கரை – 2 அல்லது 3 ஸ்பூன்
ரோஸ் மில்க் செய்முறை / summer drinks:
Rose milk recipe:- ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளவும், அவற்றில் காய்ச்சிய பாலை தேவையான அளவு ஊற்றிக்கொள்ளவும்.
பின் அதனுடன் 3/4 தேக்கரண்டி பிங்க் புட் கலர் மற்றும் 3/4 தேக்கரண்டி ரோஸ் எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின் 2 அல்லது 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் சுவையான ரோஸ் மில்க் தயார்.
இதனை பரிமாறும் போது ஐஸ் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம்.
ஸ்வீட் லஸ்ஸி (summer drinks) செய்ய தேவையான பொருட்கள்:
- தயிர் – 1/4 கப்
- நன்கு சுண்ட காய்ச்சிய பால் – ஒரு கிளாஸ்
- சர்க்கரை – 2 ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
- தண்ணீர் – ஒரு கிளாஸ்
- எலுமிச்சை ஜூஸ் – 1/2 ஸ்பூன்
செய்முறை / summer drinks:
ஒரு மிக்சி ஜாரில் 1/4 கப் தயிர், ஒரு கிளாஸ் பால், ஒரு கிளாஸ் தண்ணீர், சிறிதளவு ஏலக்காய் தூள், 1/2 ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் மற்றும் இரண்டு ஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து எடுத்து கொள்ளவும்.
அவ்வளவு சுவையான ஸ்வீட் லஸ்ஸி தயார். இதனை பரிமாறும் போது ஐஸ் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம்.