வெண்ணெய் பயன்கள் : வெண்ணெய் என்பது தயிர் அல்லது நொதிக்கப்பட்ட (புளிக்கவைக்கப்பட்ட) பால் ஆடை ஆகியவற்றில் இருந்து கடைவதன் மூலம் பெறப்படும் பால் பொருளாகும். வெண்ணையில் அதிகமாக கொழுப்புச்சத்து மட்டுமே உள்ளது. குறைந்த அளவு விட்டமின் ஏ இருக்கிறது. வெண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மை தீமைகளை காண்போம். அதேபோல் வெண்ணெய் தயாரிக்கும் முறையையும் இப்போது தெளிவாக படித்தறிவோம்.
வெண்ணெய் தயாரிக்கும் முறை / தயிரில் இருந்து வெண்ணெய் எடுப்பது எப்படி:
- தினமும் பால் காய்ச்சும் பொழுது அவற்றில் சேரும் ஆடையை மட்டும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதை ஃபிரிட்ஜியில் உள்ள உறைவிப்பான் (Freezer) வைத்துக் கொள்ளவும்.
- இதை போன்று தினமும் ஒரு 10 நாள் சேர்த்து ஃபிரிட்ஜியில் வைத்துக் கொள்ளவும்.
- வெண்ணெய் எடுப்பதற்கு முதல் நாள், சேர்த்து வைத்த பால் ஆடையை ஃபிரிசரில் இருந்து வெளியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பால் ஆடை அறை வெப்பநிலைக்கு வந்த பிறகு அதில் தயிர் ஊற்றி 12 மணி நேரம் காத்திருக்கவும்.
- பின்பு அந்த ஆடையை மிக்ஸியில் போட்டு மோர் கடைவது போல் ஒரிரு நிமிடம் நன்றாக அடிக்கவும்.
- அவற்றில் வெண்ணெய் மட்டும் கெட்டியாக மேலே திரண்டு வரும்.
- மிக்ஸியில் அடித்து தனியாக எடுத்து வைத்த வெண்ணெயை ஒரு மூன்று முறை ஐஸ் வாட்டரில் நன்றாக அலசினால் பந்து போல் வெண்ணெய் உருண்டு வரும்.
- உங்களுக்கு நெய் வேண்டும் என்றால் அந்த வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது தீயில் வைத்து உருக்கினால் சுவையான நெய்யும் கிடைக்கும். இந்த எளிய முறையில் வெண்ணெய் தயாரிப்பு செய்யலாம்.
வெண்ணெய் நன்மைகள்..!
வெண்ணெய் நன்மைகள்… வளரும் குழந்தைகள், இளம் வயதினர், உடல் உழைப்பு அதிகமுள்ளவர்கள், உடல் மெலிந்தவர்கள், காச நோயாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு நிறைய கலோரிகளும் ஊட்டச்சத்துகளும் தேவைப்படும். இவர்கள் வெண்ணெய் கலந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் ஒல்லியாக இருப்பதால் வெண்ணெயை மதிய உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தினமும் 5 முதல் 10 கிராம் வரை வெண்ணெயைச் சேர்த்துக்கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக வெண்ணெயைச் சாப்பிட்டாலும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை. இதிலுள்ள கொழுப்பானது ரத்தக் குழாய்களில் படிந்து இதயம், மூளை, ரத்தக் குழாய் சார்ந்த நோய்களை ஏற்படுத்திவிடும்.
வெண்ணெய் பயன்கள் (Butter Uses In Tamil):
வெண்ணெய் பயன்கள் (butter benefits): 1
பசும் வெண்ணெய்யில் கண்நோய்கள், உடல் சூடு, கண் எரிச்சல், கண்களில் பீளை சாடுதல் நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது.
வெண்ணெய் பயன்கள்: 2
இயற்கையாக உருவாக்கப்படும் வெண்ணெய்யில் (butter uses in tamil) வைட்டமின் A ’, வைட்டமின் D, வைட்டமின் E, துத்தநாகம், செலினியம், குரோமியம், அயோடின் உள்ளது.
வெண்ணெய் பயன்கள் (butter benefits): 3
100 கிராம் வெண்ணெய்யில் 21 கிராம் மோனோ அன் சாச்சுரேட், 3 கிராம் பாலி அன் சாச்சுரேட், 51 கிராம் சாச்சுரேட்டர் கொழுப்பு மற்றும் ஒமேகா- 3, ஒமேகா- 6, ஆன்டி ஆசிட் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் புற்று நோயை குணப்படுத்தும், வரவிடாமல் தடுக்கும்.
வெண்ணெய் பயன்கள் (butter benefits): 4
தினமும் வெண்ணெய் பயன்படுத்தும் போது பசி தூண்டப்படுகிறது.
வெண்ணெய் பயன்கள் (butter benefits): 5
தோலின் நிறம் மற்றும் முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. மூலநோயை குணப்படுத்துகிறது.
வெண்ணெய் பயன்கள் (butter benefits): 6
வெண்ணெய்யுடன் மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். முகம் பொலிவு பெறும்.
வெண்ணெய் பயன்கள் (butter benefits): 7
வெண்ணெய்யில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இருதயத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் உள்ள வைட்டமின்கள் எலும்பு வலுப்பெற சிறந்தது.
வெண்ணெய் அழகு குறிப்பு (butter beauty tips):
வெண்ணெய் அழகு குறிப்பு (butter beauty tips) 1:
2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
வெண்ணெய் அழகு குறிப்பு (butter beauty tips) 2:
1 ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
வெண்ணெய் அழகு குறிப்பு (butter beauty tips) 3:
வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். வெண்ணையை உருக்கியோ அல்லது திட நிலையிலோ பயன்படுத்தலாம். பின்பு பிரஸ் மூலம் முகத்தில் மென்மையாக தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மின்னும்.
வெண்ணெய் அழகு குறிப்பு (butter beauty tips) 4:
சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.