முக அழகை அதிகரிக்கும் கோதுமை மாவு..! இந்தாங்க நச்சுனு ஒரு பியூட்டி டிப்ஸ்..!

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Beauty Tips for Face Whitening in Tamil:- கோதுமை மாவை வைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருவளையம், முக பருக்கள், சரும வறட்சி ஆகியவற்றை போக்கிவிட முடியும். இதற்காக கடைகளில் விற்கப்படும் கிரீமினை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் பியூட்டி பார்லருக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது.

சரி வீட்டில் இருந்தபடியே இம்மாதிரியான சரும பிரச்சனைகளை சரி செய்ய கோதுமை மாவு மிக சிறந்த அழகு சாதன பொருளாக அமைந்துள்ளது. இந்த கோதுமை மாவை வைத்து செய்யக்கூடிய சில அழகு குறிப்பு டிப்ஸினை (Beauty Tips for Face Whitening in Tamil) இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

Beauty Tips for Face Whitening in Tamil:-

சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருவளையங்கள் ஆகியவற்றை அகற்ற கோதுமை மாவு பயன்படுகிறது. இந்த கோதுமை மாவில் ஒரு சூப்பரான ஃபேஷ் பேக் தயார் செய்யலாம் வாங்க.

முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும், அவற்றில் ஒரு ஸ்பூன் கோதுமை மாவை எடுத்து கொள்ளவும். இதனுடன் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய், 1/4 ஸ்பூன் கஸ்துரிமஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பேக் போல் நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த பேஷ் பேக்கை ஆண்கள், பெண்கள் இருவருமே பயன்படுத்தலாம். இந்த பேக்கை பயன்படுத்துவதற்கு முன் முகத்தை சுத்தமாக வாஷ் செய்துவிட்டு, பின் முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

முகத்தில் அப்ளை செய்த பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் செய்துவர சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும்.

குறிப்பாக சருமத்தில் உள்ள கருமைகள், கரும்புள்ளிகள், கருவளையங்கள் அனைத்தும் போக்கி சருமம் வெள்ளையாக மாற்றும் இந்த கோதுமை மாவு பேஷ் பேக்.

Related Posts

Leave a Comment

Translate »