பால் மற்றும் தயிர் இவற்றில் உள்ள நன்மைகள்..!

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பால் நன்மைகள் (Milk Benefits) பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. பாலில் தாய்ப்பால், பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என சில வகைகள் உண்டு.

இந்த பால் மற்றும் தயிர் இரண்டிலும் அதிகமாக கால்சியம் சத்து உள்ளது. இது எலும்பு மற்றும் பற்கள் இரண்டுக்கும் வலிமை அளிக்கிறது. பால் மற்றும் தயிர் இரண்டும் நமக்கு மிக எளிதாக கிடைக்க கூடியவை, ஆகையால் தினமும் அன்றாட உணவில் அதிகம் பால் மற்றம் தயிர் சேர்த்து கொள்வது மிகவும் நன்மையளிக்கும்.

பால் நன்மைகள் (Milk Benefits):

எலும்பு வலிமைக்கு

பால் நன்மைகள் (milk benefits)1: எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும். எனவே தினமும் அன்றாட உணவில் பால் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

இரத்த கொதிப்புக்கு:

பால் நன்மைகள் (milk benefits) 2: இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

நரம்பு மண்டலத்திற்கு:

பால் நன்மைகள் (milk benefits) 3: பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. எனவே தினமும் காலையிலும், இரவிலும் பால் அருந்துவதை பழகிக்கொள்ளவும்.

இரத்த அழுத்தத்திற்கு:

பால் நன்மைகள் (milk benefits) 4: பாலில் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

தாய்ப்பால் சுரப்பு அதிகமாக்க:

பால் நன்மைகள் (milk benefits) 5: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் பூண்டு கலந்த பால் குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

வயிற்றில் உள்ள கிருமிகள் அழிய:

பால் நன்மைகள் (milk benefits) 6: வயிற்றில் உள்ள கிருமி அழிய தினமும் பாலில் மஞ்சள் கலந்து நன்கு காய்ச்சி ஒரு டம்ளர் குடித்து வந்தால் உடல் மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவும்.

முகப்பருக்கள் மறைய:

பால் நன்மைகள் (milk benefits) 7: உங்கள் முகத்தில் அதிகம் பருக்கள் உள்ளதா அதற்கு கவலைப்பட தேவையில்லை. இதற்கு எளிய முறையாக பூண்டு பாலை முகத்தில் மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவுங்கள், இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்து வாருங்கள் விரைவில் முகப்பருக்கள் மறைந்துவிடும்.

தயிர் நன்மைகள் (Dahi Benefits):

தயிர் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. தயிரானது நம் உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சிப்படுத்துகிறது. பாலை விட அதிகமாக ஜீரணிக்க உதவுவது தயிர் தான்.

ஏன் என்றால் தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப் படுகிறது. இளம் பெண்கள் தேவையான அளவு தயிர் சாப்பிட்டால் உடலுக்குள் அதிகளவு கால்சியம் அதிகரிக்கும்.

தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை:

தயிர் பயன்கள் (dahi benefits):1 தயிர் நன்மைகள் : ஒரு கை நிறைய தயிரை தலையில் நன்றாக தேயித்து வந்தால் தலையில் உள்ள பொடுகு பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

தயிர் பயன்கள் (dahi benefits):2 மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவைக்கு தயிர் ஒரு சிறந்த மருந்து.

தயிர் பயன்கள் (dahi benefits):3 மஞ்சள் காமாலையின் போது தயிர் அல்லது மோர் இவற்றில் தேன் கலந்து உட்கொள்வது சிறந்த உணவாகும்.

தயிர் பயன்கள் (dahi benefits):4 வெண்டைக்காய் வதக்கும் போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கினால் நிறம் மாறாது அதேபோல் பிசுபிசுக்காமல் இருக்கும்.

தயிர் பயன்கள் (dahi benefits):5 வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

பால் மற்றும் தயிர் சாப்பிட பிடிக்காதவர் இந்த முறையில் சாப்பிடலாம்:

  • தயிருடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து லஸ்ஸியாக குடிக்கலாம்.
  • பன்னீர்கட்டிகள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
  • மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக குடிக்கலாம்.

பால்:

பால் (milk benefits) அதிகம் கால்சியம் நிறைந்தது.

அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலுடன் புரோட்டீன் பொடியை  கலந்து குடித்தால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.

தயிர் நன்மை:

தயிர் நன்மைகள் : தினமும் தயிர் உட்கொண்டால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது, இதய நோய் பிரச்சனைகள் குணப்படுத்தப்படுகிறது மற்றும் உடலில் நீர் சத்தை கட்டுப்படுத்தி வைக்கிறது. இவற்றில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Related Posts

Leave a Comment

Translate »