தோள்பட்டை வலி நீங்க எளிய வீட்டு வைத்தியங்கள்..!Tholpattai Vali Neenga..!

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Tholpattai Vali Neenga: பொதுவாக இந்த பிரச்சனை, பிறந்த குழந்தையை தவிர அனைவருக்குமே ஏற்படகூடிய பிரச்சனைதான். எந்த வேலையை செய்தாலும் தோள்பட்டையின் உதவி இல்லாமல் கண்டிப்பாக செய்யமுடியாது.

தோள்பட்டை வலி காரணம்: தோள்பட்டை வலி வருவதற்கான முதல் காரணம் அதிக கனமான பொருட்களை தூக்குவதன் காரணமாகத்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த பிரச்சனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட ஏற்படுகிறது, அதாவது அதிக புத்தக மூட்டையை தோளில் சுமந்து செல்வதனால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக்கூட இந்த தோள்பட்டை வலி ஏற்படுகிறது.

தோள்பட்டையில் வலி ஏற்பட காரணம் தசைபிடிப்பு, வீக்கம் போன்றவையாக இருக்கலாம். சிலசமயம் தோள்பட்டையில் வலி ஏற்படுவது இதயநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம் என்பதால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம்.

ஐஸ் பேக்:

ஒரு பாலிதீன் பையில் ஒரு கையளவு ஐஸ் கட்டியைப் போட்டு கட்டிக்கொள்ளவும்.

பின்பு அவற்றை வலிகள் உள்ள இடத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஓத்திடம் கொடுக்கவும்.

இந்த முறையை தினமும் 2-3 முறை என்று தொடர்ந்து செய்ய வேண்டும்.

குறிப்பாக ஐஸ் கட்டியை சாதாரணமாக தோள்பட்டையில் ஓத்திடம் கொடுக்க பயன்படுத்த கூடாது.

தோள்பட்டைக்கு ஒய்வு கொடுக்கவேண்டும்.

மணல் ஓத்திடம் (Tholpattai Vali Nattu Maruthuvam):

ஒரு பாத்திரத்தில் மணலை போட்டு நன்றாக வறுத்து சூடேற்றி கொள்ளவும்.

பின் அதனை ஒரு துணியில் போட்டு, வலியுள்ள தோள்பட்டை பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்து வர, தோள்பட்டை வலியில் இருந்து விரைவில் விடுபடலாம்.

இதே போன்று கோதுமை மாவையும் இந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தோள்பட்டை வலி குணமாக மசாஜ்:

தோள்பட்டை வலி நீங்க (Tholpattai Vali Nattu Maruthuvam) தேங்காய் எண்ணெய்யை சுடவைத்து மிதமான சூட்டில் அந்த எண்ணெய்யை சிறிது நேரம் வட்ட வடிவில் மசாஜ் செய்வதனால் தோள்பட்டை வலி குறையும்.

தோள்பட்டை வலி நீங்க கல் உப்பு:

தோள்பட்டை வலி குணமாக (Tholpattai Vali Nattu Maruthuvam) கல் உப்பை, காட்டன் துணியில் போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். பின் அந்த மூட்டையை வெதுவெதுப்பான நீர் நிரப்பிய குளியல் டப்பில் போட்டு, அதனுள் தோள்பட்டை மூழ்கும் வரை 30 நிமிடம் உட்காருங்கள்.

இப்படி தினமும் செய்து வந்தால், தோள்பட்டை வலியில் இருந்து விடுபடலாம்.

தோள்பட்டை வலி குணமாக மஞ்சள்:

தோள்பட்டை வலி நீங்க (tholpattai vali kuraiya) மஞ்சள் 2 டீஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள், பின்பு வாணலியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை (அ) ஆலிவ் எண்ணெய்யை ஊற்றி சுடவைக்கவும் பின்பு மஞ்சள் தூள் அவற்றில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்பு வலியுள்ள இடத்தில் இந்த கலவையை தடவும். இந்த முறையை வலி போகும் வரை செய்யவேண்டும்.

தோள்பட்டை வலி நீங்க அன்னாசி பழம்:

தோள்பட்டை வலி குணமாக (Tholpattai Vali Nattu Maruthuvam) அன்னாசிப்பழத்தில் இருக்கும் புரோமெலைன் திசுக்களை பாதுகாக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி காயங்கள் மற்றும் வலிகளை குணப்படுத்த உதவுகிறது. எனவே அன்னாசிப்பழத்தை தினமும் சாப்பிட்டு வர தோள்பட்டை வழியை குணப்படுத்த மிகவும் உதவுகிறது.

அன்னாசிப்பழத்தை சாதாரணமாக சாப்பிட பிடிக்காதவர்களுக்கு, அவற்றை பழச்சாறாக சாப்பிடலாம்.

தோள்பட்டை வலி குணமாக இஞ்சி:

தோள்பட்டை வலி நீங்க (tholpattai vali kuraiya) ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோலுரித்து துருவிக்கொள்ளவும், பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துகொள்ளவும்.

பின்பு துருவிவைத்துள்ள இஞ்சியை அவற்றில் 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்பு அவற்றை வடிகட்டிக்கொண்டு அவற்றில் ஒரு டீஸ்பூன் தேன்கலந்து குடிக்கவும். இந்த முறையை தொடர்ந்தது செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

தோள்பட்டை வலி நீங்க ஆப்பிள் சீடர் வினிகர்:

தோள்பட்டை வலி குணமாக (Tholpattai Vali Nattu Maruthuvam) ஆப்பிள் சீடர் வினிகர் தோள்பட்டை வலிக்கு சிறந்ததாக விளங்குகிறது.

2-3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை வலியுள்ள தோள்பட்டையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

தோள்பட்டை வலி உடற்பயிற்சி :-

Tholpattai vali kuraiya / தோள்பட்டை வலி உடற்பயிற்சி உங்கள் தோள்பட்டை வலி குணமாக. உங்கள் மருத்துவர்களின் ஆலோசனையுடன் எந்த தசை வலிமையாக உள்ளது, எந்த தசை வலுவின்றி உள்ளது என்பதை கண்டறியவும்.

ஆரம்பத்தில் மறைமுக உடற்பயிற்சிகள் செய்ய நீங்கள் மருத்துவரால் அறிவுறுத்தப்படலாம், இவை தசைகளை குணப்படுத்த தொடங்கும் பின்னர் மெதுவாக தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்ய தொடங்கலாம்.

Related Posts

Leave a Comment

Translate »