கீரை வகைகள்: உடல் ஆரோக்கியத்தை நூறு சதவீதம் காக்க கீரைகள் மற்றும் காய்கறிகள் போதும். அவற்றோடு தேவையான உப்பும் சேரும்போது அங்கே ஆரோக்கியத்திற்குக் குறைவே இருக்காது.
கீரை வகைகள் | கீரை பயன்கள் |
அகத்திக்கீரை பயன்கள் | இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். |
காசினிக்கீரை பயன்கள் | சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். |
சிறுபசலைக் கீரை பயன்கள் | சரும நோய்களை தீர்க்கும். பால்வினை நோயை குணமாக்கும். |
பசலைக் கீரை பயன்கள் | தசைகளை பலமடைய செய்யும். |
கொடிப்பசலைக் கீரை பயன்கள் | பெண்களுக்கு வெள்ளைப்படுவதை குணப்படுத்தும். மேலும் நீர் கடுப்பை குணப்படுத்தும். |
மஞ்சள் கரிசலை கீரை பயன்கள் | கல்லீரலை வலுவாக்கும். காமாலையை குணப்படுத்தும். |
குப்பைமேனி கீரை பயன்கள் | பசியை தூண்டும். |
அரைக்கீரை பயன்கள் | ஆண்மையை பெருக்கும். |
புளியங்கீரை பயன்கள் | இரத்த சோகையை குணப்படுத்தும், கண் நோயை சரியாக்கும். |
பிண்ணாக்கு கீரை பயன்கள் | வெட்டை மற்றும் நீர்க்கடுப்பை குணப்படுத்தும். |
பட்டை கீரை பயன்கள் | பித்தம், கபம் போன்ற நோய்களை குணப்படுத்தும். |
பொன்னாங்கண்ணி கீரை | உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும். |
வெள்ளை கரிசலைக் கீரை | இரத்த சோகையை குணப்படுத்தும். |
சுக்கா கீரை பயன்கள் | இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு, மூலத்தை குணப்படுத்தும். |
முருங்கை கீரை பயன்கள் | நீரிழிவை குணப்படுத்தும். மேலும் உடல் மற்றும் கண்களுக்கு அதிக பலத்தை தரும். |
வல்லாரைக் கீரை | நிஞாபக சக்தியை அதிகரிக்கும். |
முடக்கத்தான் கீரை | கை,கால் முடக்கத்தை குணப்படுத்தும், மேலும் வாயு விலகும். |
புண்ணக் கீரை | சிரங்கு மற்றும் காயங்களில் வழியும் சீதளமும் குணமாகும். |
புதினா கீரை | இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை குணப்படுத்தும். |
நஞ்சுமுண்டான் கீரை | விஷம் முறியும். |
தும்பை கீரை | அசதி, சோம்பல் நீங்கும். |
முள்ளங்கி கீரை | நீரடைப்பு நீங்கும். |
பருப்பு கீரை | பித்தத்தை குறைக்கும், உடல் சூட்டை தணிக்கும். |
புளிச்ச கீரை | கல்லீரலை பலமடைய செய்யும், மாலைக்கண் நோயை குணப்படுத்தும், ஆண்மையை பெருக்கும். |
மணலிக் கீரை | வாதத்தை குணப்படுத்தும், கபத்தை கரைக்கும். |
மணத்தக்காளி கீரை | வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும் மற்றும் தேமல் மறையும். |
முளைக்கீரை | பசியை தூண்டும், நரம்பை பலமாக்கும். |
சக்கரவர்த்திக் கீரை | தாது விருத்தியாகும். |
வெந்தயக்கீரை | மலச்சிக்கலை குணமாக்கும், மண்ணீரல் மற்றும் கல்லீரலை பலமாக்கும்.வாதம் மற்றும் காச நோய்களை குணமாக்கும். |
தூதுவளை | ஆண்மை பெருகும், சரும நோய் குணமாகும் மற்றும் சளி தொல்லை குணமாகும். |
தவசி கீரை | இருமல் குணமாகும். |
சாணக் கீரை | காயங்களை ஆற்றும். |
வெள்ளைக் கீரை | தாய் பாலை அதிகம் சுரக்க செய்யும். |
விழுத்திக் கீரை | பசியை அதிகரிக்கும். |
கொடிகாசினிக் கீரை | பித்தத்தை தணிக்கும். |
துயிளிக் கீரை | வெள்ளை வெட்டை குணமாகும். |
துத்திக் கீரை வகைகள் | வாய் மற்றும் வயிற்று புண் குணமாகும்.வெள்ளை மூலம் விலகும். |
காரக்கொட்டிக் கீரை வகைகள் | மூலநோயை குணப்படுத்தும், சீதபேதியை போக்கும். |
மூக்குத்தட்டை கீரை வகைகள் | சளியை குணப்படுத்தும். |
நருதாளி கீரை வகைகள் | ஆண்மையை பெருக்கும், வாய்ப்புண் குணமாகும். |