அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அந்த முகத்தின் அழகில் கரும் புள்ளிகள் சற்று சங்கடத்தை ஏற்படுத்தும் இந்த கரும்புள்ளிகளை பல்வேறு வகைகளில் எப்படி அகற்றலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
* பாதாம் பருப்பு மற்றும் ரோஜ இதழை அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வர கரும்புள்ளிகள் மறையும்.
* பாலுடன் கோதுமை தவிடை கலந்து அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி வந்தால் சில நாட்களில் கரும் புள்ளி காணாமல் போய்விடும்.
* வெள்ளரிச் சாறை முல்தானி மட்டியுடன் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இதே போல் செய்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
* எலுமிச்சை பழச்சாறு மற்றும் கடலெண்ணெய் சம அளவு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தேய்த்து காய்ந்ததும் அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.
* சந்தனம் மற்றும் மஞ்சள் தூள்களை சம அளவு எடுத்து அதனுடன் பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி பின்னர் தண்ணீரால் கழுவ வேண்டும்.
* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.