காபி பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக, புதியவகை காபி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு ‘டல்கோனா காபி’ என்று பெயர். ஏராளமானோர் அந்த காபியின் புகைப்படங்களையும், காபி தயாரிக்கும் முறையையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி இருக்கிறார்கள். வீட்டிலேயே டல்கோனா காபியை எளிமையாக தயாரிக்கலாம்.
தேவையானவை:
காபி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
சுடுநீர் – 2 டேபிள் ஸ்பூன்
பால் – அரை டம்ளர்
ஐஸ் கட்டி – சிறிதளவு

செய்முறை:
பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து, பின்னர் குளிர்சாதன பெட்டியில் குளிர வைத்துக்கொள்ளுங்கள்.
அகன்ற கிண்ணத்தில் காபி தூள், சர்க்கரையை போட்டு அதில் சுடுநீரை ஊற்றி நன்கு அடித்து கலக்குங்கள்.
காபி தூள் நன்றாக கலந்து கிரீம் பதத்தில் இருக்க வேண்டும்.
தொடர்ந்து குளிரவைத்த பாலை எடுத்து டம்ளரில் முக்கால் பங்கு ஊற்ற வேண்டும்.
அதில் ஐஸ்கட்டியை போடவேண்டும்.
பின்னர் காபி கிரீமை மேல்பரப்பில் ஊற்றி லேசாக கலக்கி பருகலாம்.
டல்கோனா காபி தயார் செய்யப்படும் வீடியோவை, சமூகவலைத்தளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கிறார்கள். அதனால் குறுகிய காலத்தில் டல்கோனா காபிக்கு தனி மவுசு கிடைத்திருக்கிறது.