*நிலையில்லாத உலகில்…*
*நிலைக்கும் என்ற கனவில்…*
*கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.* *அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.*
*அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.*
*தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.*
*ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான்.* *ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.*
*கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான்.*
*அங்கு இருந்த ஒரு துறவி, “அய்யா ,*
*நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே?* *இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?” என்று கேட்டார்.*
*வியாபாரி நடந்ததைக் கூறினான்.*
*துறவி சொன்னார், “அய்யா,*
*உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு*
*வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது.* *இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்?*
*அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?”*
*நம் வாழ்க்கையும் அது போல தான். ஒரு தர்ம சத்திரத்தில் இரவு தங்கி செல்லும் ஒரு வழிப்போக்கனாகவே நாம் பூமிக்கு வருவதும் போவதும்.*
*வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை.*
*பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை.* *இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம்.* *நமது துன்பங்களுக்கெல்லாம்அது தான் காரணம் என்றார் துறவி.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*