இயற்கை முறையில் எலும்பு தேய்மானத்தைத் தடுக்கும் எளிய மருத்துவம்!!!Elumbu theimanam(Bone & Joint density Problem)

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

எலும்புத் தேய்மானம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை கால்சியம் சத்துக் குறைபாடு, உடற்பயிற்சியின்மை, துரித உணவுவகைகள் என காரணங்கள் உள்ளன.மனித உடலில் 206 எலும்புகள் உள்ளது. எலும்புகளை எலும்பிலுள்ள புரதங்கள் வலுவடைய செய்கிறது.கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புபை வலுவடையசெய்கிறது.

எலும்புபை வலுவடையசெய்ய பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் தேவையான அளவு எடுத்துகொள்ளவேண்டும். உடற்பயிற்சிகளை தினமும் செய்வதனால் உணவில் உள்ள சத்துக்களை உடல் உறிந்துகொள்ளும். எலும்புகளுக்கு அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுபதனால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது.  விபத்துத்தினால் ஏற்படும் காயத்தால் ரத்த கசிவு ஏற்பட்டு  எலும்பு முறிவு ஏற்படும்.

எலும்பு வலு குறையும் போது முதுகு தண்டு வலையதுடங்கும் அப்போது நமது  உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது இதனால் மூட்டு வலி, மூட்டு இணைப்பு பகுதி வலி(JOINT PAIN), மூட்டுகளுக்கு இடையேயான ஆயில்(Lubricants) குறைவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.

ஆதலால் உடற்பயிற்சியை தவறாமல் செய்து தசைப்பகுதியையும், எலும்பையும் உறுதியுடன் வைத்துகொள்ள வேண்டும். யோகா செய்வதனால் நாள் பட்ட மூட்டு வலி குணமாகும்.35 வயது கடந்தவர்கள் எலும்பின் தன்மை குறித்த பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். எலும்பில் தாதுக்களின் குறைபாடு ஏதேனும் இருந்தால் தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.

பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.
ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

இப்போது எலும்பு பாதுகாப்பு முறை பற்றி பார்போம்:

1) 20 வயது மேற்பட்டவர்கள் உடற்பயிற்சியை தொடங்கவேண்டும் அது நடைப்பயிற்சியோ, சைக்கிள்  ஓட்டுவதோ, பளு தூக்குவதோ, யோகா செய்வதோ என எதுவென்றாலும் செய்யலாம். இதனால் எலும்பின் உறுதி மேம்படும். குறைந்தது 30 நிமிடங்களுக்கு செய்யவேண்டும்.2) ஓட்ஸ் கஞ்சியை  காலை உணவாக எடுத்து கொள்ளும் போது எலும்பின் தசைகளுக்கு தேவையான வழ வழப்பு தன்மை கிடைத்து மூட்டு வலி பறந்தோடும். மூட்டு வலி வருவதை தடுக்கும்

3) பொன்னாங்கன்னிக் கீரையுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வர மூட்டு வலி குறையும்.மூட்டு வலி வருவதை தடுக்கும்.

4) பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரை, சிறுதானியங்கள், ஓட்ஸ், நிலக்கடலை உணவில் சேர்த்து சாப்பிட எலும்பு வலுவடையும்.

5) ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து அரைத்து ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.

6) உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.

7) ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.

Related Posts

Leave a Comment

Translate »