இரத்த அழுத்தம் உயர்வதும், அதிகரிப்பதும் ஆபத்துதான். இரத்த அழுத்தம் திடீரென்று கூடிவிட்டாலோ, குறைந்து விட்டாலோ உடனடியாக என்ன செய்யவேண்டும் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
இரத்த அழுத்தம் உயர்ந்து திடீர் சோர்வு ஏற்பட்டால், உடனே பதற்றம் அடைவதை தவிர்த்து, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவேண்டும். என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே நிறுத்திவிட்டு, ஓய்வெடுங்கள். மனதை அமைதிப்படுத்தியபடி உட்கார்ந்து, இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க முன்வாருங்கள். பரிசோதனையில் இரத்த அழுத்தம் உயர்ந்திருப்பது தெரிந்தால், ஒரு மணி நேரமாவது அமைதியாக படுத்து ஓய்வெடுங்கள். இரத்த அழுத்தம் உயர்ந்திருப்பதாக கருதும்போது சுவாச பயிற்சி மேற்கொள்ளவேண்டும். முறையான சுவாச பயிற்சி பெறாதவர்களும் மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து, மெதுவாக வெளியேவிட வேண்டும். 15 நிமிடங்கள் இதை தொடர்ச்சியாக செய்யவேண்டும். பின்பு இரத்த அழுத்தத்தை பரிசோதித்துப் பாருங்கள். குறைந்திருப்பதாக தெரிந்தால், மீண்டும் அதே பயிற்சியை சிறிதுநேரம் செய்து, இரத்த அழுத்தத்தை சீராக்க முயற்சி செய்யுங்கள்.
இரத்த அழுத்தம் உயர்ந்திருப்பதாக கருதும்போது மன அமைதி முக்கியம். அதுபோல், சுற்றுப்புறத்திலும் அமைதி நிலவவேண்டும். அதிக வெயில் இல்லாத அதிக சத்தம் இல்லாத அமைதியான, காற்றோட்டமான இடத்தில் அமருங்கள். இரத்த அழுத்தம் திடீரென உயர்வது சில முக்கிய நோய் களுக்கான அறிகுறியாகும். இதய செயல்பாட்டு குறைவாலும், பக்கவாதத்திற்கான தொடக்க பாதிப்பாலும் இரத்த அழுத்தம் உயரலாம். இரத்த அழுத்தத்தோடு இயல்புக்கு மாறான மாற்றங்கள் உடலில் ஏற்பட்டாலோ, கட்டுப்பாடுகளை மீறிய தடுமாற்றங்கள் ஏற்பட்டாலோ, உடனடியாக உயர்ந்த சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைக்கு விரைந்திடுங்கள். அப்போது மன அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய எந்த தகவலும் உங்களை வந்து சேர்ந்துவிடக் கூடாது. அதனால் செல்போனை சைலண்ட் மோடில் போட்டுவிடுங்கள்.
இரத்த அழுத்தம் திடீரென்று குறைந்தால்..?
உப்பு சேர்த்த ஏதாவது ஒரு பானத்தை உடனே அருந்த முயற்சி செய்யுங்கள். எலுமிச்சை பழ சாறில் உப்பும், தண்ணீரும் கலந்து பருகுவது நல்லது. செய்துகொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு, ஓய்வெடுக்க தயாராகுங்கள். ஓய்வு என்பது அரைமணி நேரமாவது படுக்க வேண்டும். படுத்து ஓய்வெடுத்த பின்பு இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்யுங்கள். அப்போதும் இயல்பு நிலை திரும்பாவிட்டால், டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
இரத்த அழுத்தம் குறையும் நேஇரத்த ில் ஏதாவது உணவை சிறிதளவு சாப்பிடலாம். அது எளிதாக ஜீரணமாகக்கூடிய சிற்றுண்டியாக இருக்கலாம். பிஸ்கெட், பிரெட், ஓட்ஸ், ரவை போன்றது நல்லது. டீ அல்லது காபியும் பருகலாம். இந்த உணவுகள் இரத்த அழுத்தத்தை மேம்படுத்த உதவும். சிலவகையான நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளாலும் இரத்த அழுத்தம் குறையலாம். எந்த மருந்தால் இரத்த அழுத்தம் குறைந்தது என்பதை கண்டறிந்து அதற்குரிய மருந்து சாப்பிட்டு இரத்த அழுத்தத்தை சீராக்கவேண்டும். இந்த பிரச்சினையை டாக்டரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்.
மாம்பழம், பீன்ஸ், நெல்லிக்காய், திராட்சை, உலர்ந்த திராட்சை, ப்ராகோலி, நேந்திரம் பழம், ஆப்பிள், தக்காளி பேரீச்சை, ஆரஞ்சு பழம் போன்றவை இரத்த அழுத்தத்தை சீராக்கும் உணவுகளாகும்.
இரத்த அழுத்தத்தில் சீரற்ற நிலை ஏற்படாமல் இருக்க வாஇரத்த ில் ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முறையான உடற்பயிற்சி செய்யாவிட்டாலும்கூட தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் வேகமாக நடந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உப்பின் உபயோகத்தை குறையுங்கள். ஊறுகாய், அப்பளம் போன்றவைகளை சாப்பிடாதீர்கள். தினமும் உங்கள் உடலுக்குள் 5 கிராமுக்கு மேல் உப்பு சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்ப பிரச்சினை, அலுவலக பிரச்சினைகளை மனதில்போட்டு குழப்பாதீர்கள். மன அமைதி கெட்டுவிட்டால் இரத்த அழுத்தம் உயர்ந்து விடும். மது அருந்தும் பழக்கம் இருந்தால் கைவிட்டுவிடுங்கள். புகயிலை பொருட் களையும் பயன்படுத்தாதீர்கள். புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே விட்டுவிடுங்கள். தூக்கத்தில் குறட்டைவிடும் பழக்கம் இருந்தால், அடிக்கடி இரத்த அழுத்தத்தை பரிசோதியுங்கள். குறட்டை உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியாகும்.