பருப்பு பொடி செய்ய தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு – 1/2 கப்
- பொட்டுக்கடலை – 1/2 கப்
- கடலை பருப்பு – 1/4 கப்
- பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பூண்டு – 4 பற்கள்
- மிளகு – 1/4 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 5
- சீரகம் – 1/4 ஸ்பூன்
- கருவேப்பிலை – சிறிதளவு
பருப்பு பொடி செய்முறை:
பருப்புப் பொடி செய்வது எப்படி? / Paruppu podi recipe step: 1
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றை சூடேற்றவும், பின் 1/2 கப் துவரம் பருப்பை சேர்த்து வாசனை வரும் அளவிற்கு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு பிளேட்டில் எடுத்து கொள்ளுங்கள்.
பருப்புப் பொடி செய்வது எப்படி? / Paruppu podi recipe step:: 2
பின் 1/4 கப் கடலை பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
பருப்புப் பொடி செய்வது எப்படி? / Paruppu podi recipe step: 3
பிறகு அதே கடாயில் 5 காய்ந்த மிளகாய், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கருவேப்பிலை, பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும்.
பருப்புப் பொடி செய்வது எப்படி? / Paruppu podi recipe step: 4
இறுதியாக பொட்டுக்கடலையை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் வறுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, நன்றாக ஆறவைத்து கொள்ளவும்.
பருப்புப் பொடி செய்வது எப்படி? / Paruppu podi recipe step:: 5
பின் மிக்சியில் நன்கு மைபோல் அரைத்தெடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பருப்பு பொடி தயார்.
இந்த பருப்பு பொடியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும்.