குதிகால் வலி பிரச்சனையுள்ளவர்கள் இந்த இயற்கை வைத்தியம் ஒரு வாரம் முழுவதும், அதாவது ஏழு நாட்கள் வரை செய்து வந்தால் பிரச்சனை சரியாகும்.
*தேவையான பொருட்கள்:*
நொச்சி இலை
வாத முடக்கி
விளக்கெண்ணெய்
*செய்முறை:*
நொச்சி இலை மற்றும் வாத முடக்கி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு, ஒரு வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி, இந்த இலையை போட்டு வதக்கி அவற்றை குதிகாலில் வைத்து கட்டினால், குதிகால் வலி குணமாகும்.
இந்த முறையை 7 நாட்கள் வரை கட்டாயமாக செய்ய வேண்டும்.
2. குதிகால் வலி குணமாக செங்கல் ஒன்றை எடுத்து கொள்ளவும் அவற்றை நெருப்பில் சுடவைத்து, அந்த செங்கல்லின் மீது, இந்த ஏழு பழுப்பு எருக்கன் செடி இலையின் மீது விளக்கெண்ணெய் தேய்த்து அதை செங்கல் வைத்து வைத்து அதன் மேல் உங்கள் குதிகாலை வைத்து சூடு பொறுக்கும் வரை வைத்து பின்பு உங்கள் கால்களை அவற்றில் இருந்து எடுத்து விடவும்.
இவ்வாறு தினமும் இரண்டு முறை என்று ஒரு வாரம் வரை செய்து வந்தால் குதிகால் வலி குணமாகும்.
*முக்கிய குறிப்பு*
பழுப்பு எருக்கன் செடி இலை கிடைக்கவில்லை எனில் பச்சை இலை பயன்படுத்தி கொள்ளலாம்
*சுடு செங்கல் மீது நேரடியாக கால் பாதம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்*