sappathi seivathu eppadi – தேவையான பொருட்கள்:
- கோதுமை – 1 கப்
- உப்பு – தேவைக்கு
- நெய் – ½ ஸ்பூன்
- தயிர் – 1 டேபில் ஸ்பூன்
How to make soft chapathi in tamil – சமையல் குறிப்பு சப்பாத்தி /சாஃப்டா சப்பாத்தி செய்முறை:
சப்பாத்தி மிருதுவாக இருக்க என்ன செய்வது / How to make soft chapathi in tamil ஸ்டேப்: 1
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு எடுத்து கொள்ளவும், உப்பு, நெய் விட்டு கலந்து பிறகு தயிர் விட்டு கொஞ்ச கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவினை நன்றாக் பிசைய வேண்டும்.
பின்பு சப்பாத்தி கட்டையை வைத்து மாவை நன்றாக தட்டி பிசைந்தால் மாவு நல்ல மென்மையாக (SOFT) ஆக வரும்.
சப்பாத்தி மிருதுவாக இருக்க என்ன செய்வது / How to make soft chapathi in tamil ஸ்டேப்: 2
இப்போது ஒரு ஈரப்பதமுள்ள துணியில் மாவை சுற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
மாவினை நீளமாக உருட்டி, அதில் பாதியை துணியில் சுற்றி விடவும்.
மாவினை ஒரே அளவாக சின்ன துண்டுகளாக வெட்டி உருண்டை பிடிக்க வேண்டும்.
சப்பாத்தி மிருதுவாக இருக்க என்ன செய்வது / How to make soft chapathi in tamil ஸ்டேப்: 3
சப்பாத்தி பலகையில் கோதுமை மாவை சப்பாத்தி மாவின் மேல் தூவி மாவை தேய்த்து எடுக்கவும்.
தவாவில் தேய்த்து வைத்த சப்பாத்தி மாவை போட்டு 30 வினாடி கழித்து நெய் விட்டு தடவ வேண்டும். நன்றாக சுத்தி விட்டு வேக வைக்கவும்.
குறிப்பு:
- கோதுமை மாவு நல்ல தரமானதாக இருக்க வேண்டும்.
- தயிருக்கு பதிலாக சூடான பால் அல்லது சூடான தண்ணீர் சேர்த்து மாவை பிசையலாம்.
- மாவை சப்பாத்தி கட்டையினால் அடிப்பதினால் நல்ல மிருதுவாக வரும்.
- சப்பாத்தி மாவினை குறைந்த தீயில், திருப்பி திருப்பி போட்டு சுடக் கூடாது.
- அதேபோல் நாம் வீட்டில் சப்பாத்தி மாவு அரைக்கும் போது, ஒரு கிலோ கோதுமைக்கு 100 கிராம் என்ற அளவிற்கு கொண்டைக்கடலை சேர்த்து மாவு அரைத்தாலும் சப்பாத்தி நல்ல சாஃப்டாக வரும்.