ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா செய்முறை..! Channa Masala Gravy Recipe..!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சென்னா மசாலா செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:

  1. ஆயில் – 2 டேபிள் ஸ்பூன் 
  2. பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
  3. இடிச்ச இஞ்சி விழுது – 1 டேபிள் ஸ்பூன் 
  4. இடிச்ச பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் 
  5. பெரிய வெங்காயம் – 250 கிராம் (பொடியாக நறுக்கியது)
  6. பெங்களூர் தக்காளி – 2 (அரைத்தது)
  7. மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் 
  8. மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் 
  9. மல்லித்தூள் – 1 டீஸ்பூன் 
  10. சீரக தூள் – 1/2 டீஸ்பூன் 
  11. தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன் 
  12. ரெட் சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் 
  13. சோயா சாஸ் – 1 டீஸ்பூன் 
  14. கொண்டைக்கடலை – 100 கிராம் 
  15. உப்பு – தேவையான அளவு 
  16. தண்ணீர் – தேவையான அளவு 
  17. கொண்டைக்கடலை வேகவைத்த தண்ணீர் – சிறிதளவு 
  18. கர மசாலா – 1/2 டீஸ்பூன் 
  19. கசுரி மேத்தி – சிறிதளவு 
  20. கொத்தமல்லி இலை – தேவையான அளவு 

செய்முறை விளக்கம் 1:

முதலில் கடாயில் ஆயில் 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்துக்கொள்ளவும். பிறகு எண்ணெயில் பொடியாக நறுக்கி வைத்துள்ள 1 பச்சை மிளகாயை சேர்க்கவும்.

அடுத்து 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு இடிச்ச இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். எண்ணெயில் சேர்த்த பிறகு நன்றாக 30 வினாடி வரை வதக்கி கொள்ளவும்.

செய்முறை விளக்கம் 2:

நன்றாக வதங்கிய பிறகு பெரிய வெங்காயம் 250 கிராம் பொடியாக நறுக்கி வைத்ததை சேர்த்துக்கொள்ளவும். இந்த வெங்காயம் நன்றாக பழுப்பு நிறத்திற்கு வரும்வரை வதக்கவும்.

அடுத்து 2 பெங்களூர் தக்காளி மிக்ஸியில் அரைத்து வைத்ததை வெங்காயத்துடன் சேர்க்கவும். இதை 2 நிமிடம் அதாவது தக்காளியின் பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ளவும்.

செய்முறை விளக்கம் 3:

நன்றாக கொதித்த பிறகு இதனுடன் மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் 2 டீஸ்பூன், மல்லித்தூள் 1 டீஸ்பூன், சீரக தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து இதன் பச்சை வாடை போகும் அளவிற்கு அதாவது 1 நிமிடம் வதக்கிக்கொள்ளவும்.

அடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் தக்காளி சாஸ் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.

தக்காளி சாசுடன் ரெட் சில்லி சாஸ் 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும்.

செய்முறை விளக்கம் 4:

சோயா சாஸ் 1 டீஸ்பூன் எடுத்து கொள்ளவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். கலந்த பிறகு கடாயில் இருக்கும் கிரேவியில் ஊற்றவும்.

இதையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

8 மணி நேரம் ஊறவைத்த 100 கிராம் கொண்டைக்கடலை தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வைத்து வேகவைத்த கொண்டைக்கடலையை கிரேவியில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

செய்முறை விளக்கம் 5:

அடுத்து கிரேவியில் கொண்டைக்கடலை வேகவைத்த தண்ணீர் சிறிதளவு மற்றும் தண்ணீர் 1/2 கிளாஸ் அளவிற்கு சேர்க்க வேண்டும்.

இப்போது 1/2 டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.

இதை மூடிவைத்து 3 அல்லது 4 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

செய்முறை விளக்கம் 6:

அடுத்து நன்றாக வெந்த பிறகு இதில் கர மசாலா 1/2 டீஸ்பூன், கசுரி மேத்தி தேவையான அளவுக்கு சேர்த்து கொள்ளவேண்டும்.

இந்த கசுரி மேத்தி வீட்டில் இருந்தால் போட்டுக்கொள்ளலாம். இல்லையென்றால் போடாமல் கூட இதை செய்யலாம்.

இறுதியாக கொத்தமல்லி தூவி சென்னா மசாலாவை இறக்கிவிடலாம். அவ்ளோதாங்க சுவையான சென்னா மசாலா ரெடி ஆகிட்டு.

இந்த டிப்ஸை கண்டிப்பா ட்ரை பண்ணி பூரி, சப்பாத்தி, பரோட்டா போன்ற உணவுகளுக்கு செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Related Posts

Leave a Comment

Translate »