நரை முடிக்கு சிறந்த பீட்ரூட் ஹேர் டை

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இந்த இயற்கை பீட்ருட் ஹேர் டை இளநரை மற்றும் நரை முடி உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று வாரங்கள் பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக இளநரை மற்றும் நரை முடி பிரச்சனை உடனே சரியாகும்.

தேவைப்படும் பொருட்கள்:

கறிவேப்பில்லை – ஒரு கப்
சிவப்பு செம்பருத்தி பூ – 10
எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
தண்ணீர் – 200 மில்லி
பீட்ருட் – ஒன்று
காபி தூள் – மூன்று ஸ்பூன்

அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைக்கவும். அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். தண்ணீர் நன்றாக சூடாகியதும், அவற்றில் மூன்று ஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். காபித்தூள் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கும் போது நன்றாக நுரை கிளம்பும் என்பதால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.

மிக்சி ஜாரில் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக பீட்ருட்டை நறுக்கி போட்டு  அதனுடன் ஒரு கப் கறிவேப்பிலை, 10 சிகப்பு செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு இந்த கலவையை அடுப்பில் வைத்துள்ள காபித்தூள் கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். ஒரு 10 நிமிடங்கள் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எடுக்கவும்.

இந்த கலவை ஒரு மணி நேரத்துக்குள் நன்றாக ஆறிவிடும் என்றாலும், குறைந்தது 12 மணி நேரம் வரை வைத்திருந்து பின்பு தான் இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்த வேண்டும்.  எனவே இந்த கலவையை மாலை நேரங்களில் தயாரித்து இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில், இந்த பீட்ருட் ஹேர் டையை பயன்படுத்தவும்.

தயாரித்து வைத்துள்ள இந்த ஹேர் டையை வடித்து அல்லது அப்படியே கூட பயன்படுத்தலாம். வடிகட்டி பயன்படுத்தும்போது, தலை அலசுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்துவதற்கு முன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து பின்பு ஹேர் டையாக பயன்படுத்தவும்.

இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கையானது என்பதால், தலை முடிகளுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக இந்த கலவையில் சேர்க்கப்பட்டுள்ள கறிவேப்பிலை அதிகளவு இரும்பு சத்துள்ளது, மேலும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது, தலை முடி வேர்களுக்கு நல்ல வலிமை அளிக்கிறது.

மேலும் செம்பருத்தில் உள்ள கொலுஜான் தலை முடிக்கு நல்ல போஷாக்கை அளிக்கிறது. எலுமிச்சை தலையில் உள்ள பொடுகை அகற்ற பெரிதும் உதவுகிறது. அதேபோல் பீட்ருட் இளநரை மற்றும் நரை முடிகளுக்கு நிரந்தரமான கருமை நிறத்தை அளிக்க பெரிதும் பயன்படுகிறது.

இந்த பீட்ருட் ஹேர் டையைதொடர்ந்து மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தி வந்தால் நரை முடி மறைய ஆரமித்துவிடும்.

Related Posts

Leave a Comment

Translate »