சூடான நீருடன் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் போது இது சளியை நிகழச் செய்து தொண்டை புண்ணிலிருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. உப்பு கலந்த நீர் அதிக அடர்த்தி கொண்டது. பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உங்கள் தொண்டையில் தங்கி வலியை ஏற்படுத்தும். உப்பு நீரில் உள்ள சோடியம் அதிக அடர்த்தியில் இருப்பதால் அடர்த்தி குறைந்த திசு சவ்வுகளின் வழியாக ஊடுருவி அங்கு தங்கியுள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்கிறது. இதனால் மேலும் சளி உருவாகாமல் தொண்டை புண் குணமாகிவிடும்.
Visits: