தேவையான பொருட்கள்:
- பிரட் – ஒரு கப் நறுக்கியது
- சீரகம் – 1/4 ஸ்பூன்
- பொடிதாக நறுக்கிய பூண்டு – ஒரு ஸ்பூன்
- பொடிதாக நறுக்கிய இஞ்சி – ஒரு ஸ்பூன்
- கடுகு – 1/4 ஸ்பூன்
- நறுக்கிய பச்சைமிளகாய் – 4
- காய்ந்த மிளகாய் – 4
- கருவேப்பிலை – சிறிதளவு
- பெரிய வெங்காயம் – 2 பொடிதாக நறுக்கியது
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- தக்காளி – 2 பொடிதாக நறுக்கியது
- குடைமிளகாய் – 1 பொடிதாக நறுக்கியது
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – தேவையான அளவு
- கொத்தமல்லி இலை – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
பிரட் சில்லி செய்முறை / Bread Chili recipes:
Bread Chili recipes in tamil step by step:
Step: 1
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடேறியதும் மீடியம் சைசில் நறுக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளை அவற்றில் சேர்க்கவும், பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பிரட் துண்டுகளை 2 நிமிடங்கள் பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள்.
Step: 2
பின் அதே கடாயில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின் அவற்றில் கடுகு 1/4 ஸ்பூன், சீரகம் 1/4 ஸ்பூன், பொடிதாக நறுக்கிய இஞ்சி 1 ஸ்பூன், பொடிதாக நறுக்கிய பூண்டு 1 ஸ்பூன், நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய் 4, காய்ந்த மிளகாய் 4 மற்றும் சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
Step: 3
பின் அதனுடன் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அந்த சமயம் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
Step: 3
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கிய பின் அதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் கரம் மசலா தூள், 2 ஸ்பூன் மிளகாய் தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
Step: 4
பின் அதனுடன் பொடிதாக நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதாவது வெங்கயமும், தக்காளியும் சேர்த்து வதக்கும் போது எண்ணெய் பிரிந்து வரும் அந்த அளவிற்கு வதக்கினால் போதும்.
Step: 5
மசாலாவில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அதனுடன் பொடிதாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாவை சேர்த்து ஒரு நிமிடங்கள் வரை நன்றாக வதக்க வேண்டும்.
Step: 6
குடைமிளகாவை நன்கு வதக்கிய பின் வறுத்து தனியாக வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதவாது பிரட்டில் மசாலாக்கள் நன்கு சேரும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
இறுதியாக இவற்றில் பொடிதாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து ஒரு கிளறி இறக்கினால் சுவையான பிரட் சில்லி ரெசிபி தயார்.