மைதா மாவு கேக் செய்வது எப்படி?
கேக் செய்ய தேவையான பொருட்கள்:-
- சர்க்கரை – 3/4 கப்
- முட்டை – 3
- மைதா மாவு – 3/4 கப்
- பேக்கிங் பவுடர் – 1/2 ஸ்பூன்
- உப்பு – சிறிதளவு
அடுப்பில் கேக் செய்வது எப்படி?
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அவற்றில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி hand beater கொண்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
பின் அடித்த முட்டையுடன் 3/4 கப் சலித்த மைதா மாவு மற்றும் 3/4 கப் மிக்சியில் பவுடர் செய்த சர்க்கரை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
பிறகு 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து சூடேற்ற வேண்டும்.
பின் ஒரு நான்ஸ்டிக் கடாயை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் நெய் அல்லது பட்டர் ஏதேனும் ஒன்றை நன்றாக தடவிவிடுங்கள்.
பின் கலந்து வைத்துள்ள கேக் மாவை இந்த நான்ஸ்டிக் கடாயில் ஊற்றி, அடுப்பில் வைத்துள்ள தோசை கல் மீது வைத்து மூடிவிடுங்கள்.
பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 45 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.
45 நிமிடங்கள் கழித்த பின் அடுப்பிலிருந்து இறக்கி கேக்கை தனியாக எடுத்தால் சுவையான கேக் தயார். விருப்பமிருந்தால் இதனுடன் கிரீம் தடவியும் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.