ஃப்ரேக் பாஸ்ட் ரெசிபி செய்முறை:
தேவையான பொருட்கள்:
- கெட்டியான இட்லி மாவு – 1 கப்
- தேங்காய் துருவல் – 1 கப்
- சர்க்கரை – 1 அல்லது 1/2 ஸ்பூன் அளவு
- உப்பு – தேவையான அளவு
- ஏலக்காய் – 3
Steps 1:
முதலில் கெட்டியாக அரைத்த இட்லி மாவு 1 கப் எடுத்து கொள்ளவும். அடுத்து தேங்காய் துருவல் 1 கப் எடுத்து கொள்ளவும்.
அடுத்ததாக இந்த மாவில் சர்க்கரை 1 அல்லது 1/2 ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும்.
Steps 2:
உப்பு சர்க்கரையின் சுவை தெரிவதற்காக சிறிதளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது நன்றாக மாவை கலந்துகொள்ள வேண்டும்.
அடுத்து மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவலை சேர்க்கவேண்டும். மிக்ஸி ஜாரில் இருக்கும் தேங்காய் துருவலுடன் ஏலக்காய் 3 சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
Steps 3:
அரைத்த ஏலக்காய் பாலை தனியாக பவுலில் ஊற்றிக்கொள்ளவும். இப்போது அரைத்த பாலுடன் 1/2 கப் சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை நன்றாக மிக்ஸ் செய்யவும்.
அடுத்து சர்க்கரை சேர்த்த மாவை எடுத்துக்கொள்ளவும். இந்த மாவு பஞ்சு போல் வேண்டும் என்றால் சிறிதளவு சோடா உப்புவை கூட சேர்க்கலாம்.
இப்போது அடுப்பில் எண்ணெயை நன்றாக ஹீட் செய்து வைத்து கொள்ளவேண்டும்.
Steps 4:
எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பவுலில் இருக்கும் மாவை சிறிது சிறிது அளவாக எடுத்து எண்ணெயில் பொறிக்க வேண்டும்.
நன்றாக சிவந்த நிலையில் வந்த உடன் எடுக்க வேண்டும்.
Steps 5:
எல்லாவற்றையும் பொரித்து எடுத்தபிறகு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போதே அரைத்த தேங்காய் பாலில் பொரித்து எடுத்ததை சேர்க்க வேண்டும்.
இதை உடனே சாப்பிடாமல் அந்த பாலில் 10 நிமிடம் ஊறவைத்து சாப்பிட்டால் இந்த தேங்காய் பாலுடன் பணியாரம் ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும்.
இந்த டிப்ஸை கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க.