இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி..! Snacks recipe in tamil..!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய்(Honey Recipes in tamil) – தேவையான பொருட்கள்:

  1. இட்லி மாவு கெட்டியாக – (புதுசாக அரைத்த மாவு)
  2. ஆரஞ்சு கலர் புட் கலர் – 1 ஸ்பூன் 
  3. பேக்கிங் சோடா – 1 ஸ்பூன் 
  4. சர்க்கரை – 100 கிராம் 
  5. எண்ணெய் – தேன் மிட்டாய் பொரித்து எடுக்க தேவையான அளவு

இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி / Then mittai seivathu eppadi – செய்முறை விளக்கம் 1:

முதலில் புதுசாக அரைத்த இட்லி மாவு எடுத்து கொள்ளவும். புளிப்பு தன்மை இல்லாத மாவினை எடுத்துக்கொள்ளவும். மாவு நன்றாக கெட்டியாக இருக்க வேண்டும். ஏனென்றால் இதனுடன் அரிசி மாவோ அல்லது கான் ஃப்ளவர் மாவு சேர்க்கப்போவதில்லை. அதனால் மாவு கெட்டியான தன்மையுடன் இருக்க வேண்டும்.

உங்களுக்கு தேன் மிட்டாய் எவ்ளோ வேணுமோ அந்த அளவுக்கு நீங்க மாவு எடுத்துக்கோங்க.

இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி / Then mittai Recipe செய்முறை விளக்கம் 2:

கடைல விக்கிற தேன் மிட்டாய்(honey recipes) பாத்தோம்னா நல்லா கலரா இருக்கும். அந்த மாறி கலர் நமக்கும் வரதுக்கு இட்லி மாவுடன் ஆரஞ்சு கலர் புட் கலர் 1 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும். அதன் பிறகு இதனுடன் பேக்கிங் சோடா  1 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும்.

இட்லி மாவுடன் எல்லாவற்றையும் சேர்த்த பிறகு நன்றாக ஸ்பூனால் கலந்துகொள்ளவும்.

இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி / Then mittai seivathu eppadi – செய்முறை விளக்கம் 3:

மாவு நன்றாக கலந்தபிறகு சர்க்கரை பாகு செய்ய வேண்டும். நம்ம எடுத்து வெச்சிருக்க மாவுக்கு 100 கிராம் சர்க்கரை பாகு ரெடி பண்ணா போதுமானது.

அடுத்து ஒரு கடாயில் சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நுரை வரும் அளவிற்கு நன்றாக 2 நிமிடம் கொதிக்க வைக்கவேண்டும். நன்றாக கொதித்த பிறகு அடுப்பை நிறுத்திக்கொள்ளலாம்.

இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி / Then mittai Recipe செய்முறை விளக்கம் 4:

தேன் மிட்டாய்(snacks recipe in tamil) பொரித்து எடுக்க எண்ணெய் தேவையான அளவிற்கு எடுத்து ஹீட் பண்ணி வெச்சிக்கோங்க.

பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ரெடி பண்ண மாவை அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்து எண்ணெயில் விடவும். அப்போதா கடையில் கிடைக்கிற தேன் மிட்டாய்(evening snacks) மாறி நமக்கு கிடைக்கும்.

இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி / Then mittai seivathu eppadi – செய்முறை விளக்கம் 5:

பின் எல்லா மாவையும் எண்ணெயில் விட்ட பிறகு நன்றாக மிட்டாய் பொரிந்து வந்தவுடன் எண்ணெயை வடிகட்டிட்டு எடுத்துக்கொள்ளலாம்.

பொரித்து எடுத்த மிட்டாயை தனியாக ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.

இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி / Then mittai Recipe செய்முறை விளக்கம் 6:

அடுத்து தட்டில் கொட்டி வைத்த தேன் மிட்டாயை(honey recipes) ரெடி பண்ண சர்க்கரை பாவில் தேன் மிட்டாய் சூடாக இருக்கும் போதே பாவில் போடவேண்டும்.

தேன்மிட்டாய் அந்த பாவில் 15 நிமிடம் நன்றாக ஊறவேண்டும். அப்போதான் அந்த சர்க்கரை பாவு நல்லா ஊறி ஓரு ஜூஸியான தேன்மிட்டாய் கிடைக்கும்.

அவ்ளோதாங்க இந்த தேன்மிட்டாய் ரெசிபி ரெடி. இத எல்லாரும் வீட்ல கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

Related Posts

Leave a Comment

Translate »