ஹோட்டல் ஸ்டைல் பன் பரோட்டா செய்வது எப்படி..! Bun Parotta Recipe In Tamil..!

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்:

  1. மைதா மாவு – 1 கப் 
  2. உப்பு – தேவையான அளவு 
  3. சர்க்கரை – 1 ஸ்பூன் 
  4. காய்ச்சிய பால் – 1 கரண்டி அளவு 
  5. முட்டை – 1 
  6. தண்ணீர் – தேவையான அளவு 
  7. எண்ணெய் – சிறிதளவு 

Steps 1:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு 1 கப் அளவு எடுத்து கொள்ளவும். மைதா மாவுடன் தேவையான அளவிற்கு உப்புவை சேர்த்து கொள்ளவேண்டும்.

அடுத்ததாக சர்க்கரை 1 ஸ்பூன் அளவு மைதாவுடன் சேர்க்க வேண்டும்.

Steps 2:

சர்க்கரை சேர்த்த பிறகு மாவை நன்றாக மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும். இதனுடன் காய்ச்சி வைத்து ஆரிய பாலை 1 கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும்.

பால் சேர்த்த பிறகு 1 முட்டையை உடைத்து சேர்த்து கொள்ள வேண்டும்.

இப்போது எல்லாவற்றையும் கையால் மாவினை பிசைந்து கொள்ளவேண்டும்.

Steps 3:

அடுத்து மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவினை பிசைய வேண்டும். தண்ணீரை நிறைய அளவு சேர்க்காமல் தேவையான அளவிற்கு மட்டும் சேர்க்க வேண்டும்.

10 நிமிடம் நன்றாக அழுத்தி மாவை பிசைந்து வைக்கவும். கையில் ஒட்டாத அளவிற்கு மாவின் தன்மை வந்த பிறகு மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் தனியாக மூடி ஊறவைக்க வேண்டும்.

Steps 4:

2 மணிநேரம் கழித்து அதை எடுத்தவுடன் மாவானது மிகவும் மென்மையான தன்மைக்கு இருக்கும். இப்போது இந்த மாவை கையால் பிசைந்து உருண்டை வடிவில் எல்லா மாவையும் உருட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

உருட்டிய உருண்டையின் மேல் சிறிதளவு எண்ணெயை தடவி கொள்ளவேண்டும். இதையும் 1 மணிநேரம் மூடி போட்டு நன்றாக ஊறவைக்க வேண்டும்.

Steps 5:

1 மணிநேரம் பின்னர் பரோட்டா போடும் இடத்தில் எண்ணெயை தேய்த்து வைத்து கொள்ளவேண்டும். அந்த இடத்தில் உருண்டையாக உருட்டி வைத்துள்ளதை அகலமாக தேய்த்து கொள்ளவேண்டும்.

தேய்த்ததை இரண்டு பகுதியாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மடக்கி வைத்த பிறகு விரலால் மாவை சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

சுற்றி எடுத்து, பிறகு ஒரு தடவை மாவை தேய்த்து கொள்ளவும்.

Steps 6:

இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து தேய்த்த உருண்டை மாவை கடாயில் பழுப்பு நிறத்தில் வரும் நிலையில் பரோட்டாவை பிரட்டி எடுக்க வேண்டும்.

அவ்ளோதாங்க பன் பரோட்டா ரெடி. பரோட்டாவை சூடான நிலையில் இருக்கும் போதே இரு கைகளால் தட்டி எடுத்து கொள்ளவும். அப்போதுதான் பரோட்டா லேயராக பிரிந்து வரும்.

சுவையான பரோட்டா ரெடி..! வீட்ல எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க..!

Related Posts

Leave a Comment

Translate »