சப்பாத்தி குருமா செய்ய தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு:
- பட்டை – 3 துண்டுகள்
- கிராம்பு – 4
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- சோம்பு – 1 ஸ்பூன்
- மிளகு – 1 ஸ்பூன்
- இஞ்சி – ஒரு துண்டு
- பூண்டு – 5 பல்
- பச்சை மிளகாய் – 3
- பெரிய வெங்காயம் – 1 பொடிதாக நறுக்கியது
- கருவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடியளவு
- துருவிய தேங்காய் – 1/4 கப்
- தோல் நீக்கிய வேர்க்கடலை – 1/4 கப்
தாளிப்பதற்கு:-
- எண்ணெய் – தேவையான அளவு
- கருவேப்பிலை – சிறிதளவு
- வெங்காயம் பொடிதாக நறுக்கியது – ஒரு கைப்பிடியளவு
- மல்லி தூள் – ஒரு ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
சப்பாத்தி குருமா செய்முறை விளக்கம்:-
விளக்கம்: 1
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 1 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேற்றவும்.
விளக்கம்: 2
எண்ணெய் நன்கு சூடேறியதும் அவற்றில் 3 பட்டை, 4 கிராம்பு, சீரகம் 1/2 ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், ஒரு துண்டு இஞ்சி, பூண்டு 5 பல், 3 பச்சை மிளகாய், பொடிதாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
விளக்கம்: 3
பின் ஒரு கைப்பிடியளவு கருவேப்பிலை, ஒரு கைப்பிடியளவு கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.
பின் இதனுடன் 1/4 கப் துருக்கிய தேங்காய் மற்றும் 1/4 கப் தோல் நீக்கிய வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.
விளக்கம்: 4
இப்பொழுது இந்த வதக்கிய கலவையை நன்கு ஆறவைத்து மிக்ச்சியில் மைபோல் அரைத்து கொள்ளுங்கள்.
பின் திரும்பவும் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 1 1/2 மேஜை கரண்டி எண்ணெயை ஊற்றவும் எண்ணெய் நன்கு சூடேறியதும். சிறிதளவு கருவேப்பிலை மற்றும் ஒரு கைப்பிடியளவு பொடிதாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
விளக்கம்: 5
பிறகு ஒரு ஸ்பூன் மல்லி தூள் மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து ஒரு முறை கிளறிவிடுங்கள். பின் ஒரு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள். அதாவது எண்ணெய் பிரிந்து வரம் அளவிற்கு கிரேவியை நன்கு கொதிக்க வையுங்கள்.
விளக்கம்: 6
பின் சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான chapati kurma தயார். இந்த கிரேவியை சப்பாத்திக்கு மட்டுமின்றி பூரி, இட்லி, தோசை, புலாவ், பிரியாணி போன்று அனைத்து உணவுகளுக்கும் சைடிஷ் ஆக தொட்டு சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.