சேமியா கேசரி செய்வது எப்படி..! Semiya Kesari Seivathu Eppadi..!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சேமியா கேசரி செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:

  1. நெய் – 2 ஸ்பூன் 
  2. முந்திரி பருப்பு – 10 அல்லது 15 
  3. திராட்சை – 10 அல்லது 15
  4. சேமியா -1 கப் 
  5. தண்ணீர் – 2 கப் 
  6. சர்க்கரை – தேவையான அளவு 
  7. சர்க்கரையுடன் இடித்த ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன் 
  8. கேசரி பவுடர் – 2 சிட்டிகை 

Steps 1:

முதலில் கடாயில் 2 ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஹீட் செய்து கொள்ளவும்.

அடுத்ததாக நெய்யுடன் முந்திரி பருப்பு 10 அல்லது 15 சேர்த்து பழுப்பு நிறம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.

Steps 2:

அடுத்து கடாயில் திராட்சை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வறுத்து கொள்ள வேண்டும்.

நன்றாக வறுத்த பிறகு தனியாக முந்திரி திராட்சையை தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.

Steps 3:

இப்போது கடாயில் இருக்கும் வறுத்து வைத்துள்ள நெய்யுடன் 1 கப் சேமியாவை வறுத்து கொள்ள வேண்டும்.

நெய்யில் சேமியாவை வறுத்து செய்தால் இன்னும் சுவை அதிகமாக இருக்கும்.

1 நிமிடம் சேமியாவை வறுத்து தனியாக தட்டில் எடுத்து கொள்ளவும்.

Steps 4:

அடுத்ததாக சேமியாவை வேக வைக்க கடாயை ஹீட் செய்ய வேண்டும்.

அடுத்து ஹீட் செய்த பிறகு கடாயில் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு வறுத்து தட்டில் வைத்த சேமியாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

 Steps 5:

தண்ணீர் சுண்டும் அளவிற்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். நன்றாக சேமியா வெந்த பிறகு சர்க்கரை தேவையான அளவிற்கு சேர்க்கவும்.

சர்க்கரை சேர்த்த பிறகு நன்றாக கலந்து வேக வைக்க வேண்டும்.

இப்போது சர்க்கரையுடன் இடித்த ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன் சேர்க்க வேண்டும்.

Steps 6:

ஏலக்காய் பொடியுடன் கேசரி பவுடர் 2 சிட்டிகை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

கேசரி பவுடர் சேர்க்காமல் குங்குமப்பூ சேர்த்து கூட இந்த சேமியாவை செய்யலாம்.

Steps 7:

சேமியா வெந்த பிறகு வறுத்து வைத்த முந்திரி திராட்சயை சேர்த்து நன்றாக கிளறி விட்டு கடாயில் இருந்து சேமியாவை இறக்கிவிட வேண்டும்.

அவ்ளோதாங்க இந்த சுவையான சேமியா கேசரி ரெடி. இந்த ரெசிபியை எல்லாரும் வீட்ல கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

Related Posts

Leave a Comment

Translate »