இரண்டு மாத குழந்தைக்கு வரும் மலச்சிக்கலும், தீர்க்கும் வழிமுறையும்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பிறந்த குழந்தை இரண்டு நாட்கள் வரை சரியாக மலம் கழிக்கவில்லை என்றால் குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது என அர்த்தம். இரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கல் (baby constipation) பிரச்சனை வருவதற்கு மூல காரணம் உடல் உஷ்ணம் மற்றும் வறட்சியின் காரணமாகவே ஏற்படுகிறது. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த பிரச்சனை இருந்தாலும் குழந்தைக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

உங்கள் குழந்தைக்கு கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளின்படி தண்ணீரின் சரியான அளவை கொண்டு சேர்க்கவேண்டும். தாய்ப்பாலூட்டும் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவது அரிதுதான்.இருப்பினும், தாய்ப்பால் எளிதாக செரிமானம் ஆகக்கூடிய காரணத்தினால் குழந்தை அடிக்கடி மலம் கழிக்கக்கூடும்.

இரண்டு மாத குழந்தை உடல் வறட்சியின் காரணமாக கூட மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். எனவே தினமும் தேவையான அளவு ஆறிய வெந்நீரை கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு தினமும் ஒரு முறையாவது குழந்தையின் உச்சி தலையில் ஒரு துளி எண்ணெய் வைத்திவிட வேண்டும். ஏனென்றால் குழந்தையின் உடல் உஷ்ணத்தினால் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம்.

குழந்தைக்கு உலர்திராட்சையை நீரில் ஊறவைத்து ஒரு சங்களவு குழந்தைக்கு தினமும் கொடுத்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

மேல் கூறிய மூன்று முறைகளை செய்தும் குழந்தைக்கு இந்த பிரச்சனை சரியாகவில்லை என்றால். தாய் தினமும் இஞ்சி நீர் குடித்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

வசம்பு குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனைக்கு (baby constipation) சிறந்த மருந்தாக விளங்குகிறது.

எனவே வசம்பை அடுப்பில் எரித்து அவற்றை உரசுமக்கல்லில் நன்றாக உரசி ஒரு சங்களவு தாய்ப்பாலில் இந்த வசம்பை கலந்து குழந்தைக்கு, வாரத்தில் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

இருப்பினும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக குழந்தைக்கு குடல் சம்மந்தமான பிரச்சனை இருக்கின்றது என்று அர்த்தம். எனவே குழந்தையை கண்டிப்பாக குழந்தை நல மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

Related Posts

Leave a Comment

Translate »