தேவையான பொருட்கள் :
ரவை – ஒரு கப்,
மைதா மாவு – ஒரு கப்,
அரிசி மாவு – ஒரு கப்,
துருவிய தேங்காய் – கால் கப்,
வேர்க்கடலை, வெள்ளை எள் – சிறிதளவு,
மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ரவை, மைதா, அரிசி மாவு மூன்றினையும் துருவிய தேங்காயுடன் கலந்து கொள்ளவும்.
கலவையில் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சிறிதளவு எண்ணெய், வெள்ளை எள் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
அதனுடன் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி ஆட
கலந்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொன்றையும் தட்டையைப் போல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.