பாத வெடிப்பு குணமாக கிரீம் – தேவையான பொருட்கள்:
- வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பு – ஓரு ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
பாத வெடிப்பு குணமாக கிரீம் – செய்முறை:
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சுண்ணாம்பு மற்றும் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்பு அவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள், அவ்வளவுதான் கிரீம் (foot crack cream) தயார். தேங்காய் எண்ணெய்க்கு பதில் விளக்கெண்ணெய் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.
பாத வெடிப்பு குணமாக கிரீமை பயன்படுத்தும் முறை:
பாத வெடிப்பு குணமாக: தினமும் இரவு தூங்குவதற்கு முன், கால்களை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து, பழைய டூத் பிரஷை பயன்படுத்தி கால்களில் இருக்கும் அழுக்கை நீக்கிவிட்டு, பின்பு இந்த கிரீமை (foot crack cream) பாத வெடிப்பு (cracked heels) உள்ள இடத்தில் தடவி, இரவு முழுவதும் வைத்திருந்து, பின்பு மறுநாள் காலை எழுந்ததும் கால்களை கழுவி விடவும்.
இவ்வாறு தொடர்ந்து இந்த முறையை இரண்டு வாரங்கள் வரை செய்து வர கால்களில் உள்ள பாத வெடிப்புகள் மறைந்து விடும். பாத வெடிப்பு குணமாக இதைவிட சிறந்த வைத்தியம் இல்லை..!