15 நிமிடங்களில் பொலிவான சருமம் பெற அழகு குறிப்புகள்:-
ஒரு உருளைக்கிங்கை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் உள்ள தோல்பகுதியை நீக்கிவிட்டு, சுத்தமான நீரில் உருளைக்கிழங்கினை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
பின் நைசாக துருவி, அவற்றில் இருந்து சாறு (juice) பிழிந்து கொள்ளுங்கள்.
இந்த ஜூஸினை பயன்படுத்திதான் Step by Step ஆக பேசியல் எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
கீழே Step 1 முதல் 5 Step வரை முகத்தில் பேசியல் செய்வதற்கு அழகு குறிப்பு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ள, எனவே இந்த 5 Steps-யும் தொடர்ச்சியான முறையில் செய்ய வேண்டும்.
Potato juice for face in tamil step: 1
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் ஒரு ஸ்பூன் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை ஒரு காட்டன் பெட் (cotton pads) பயன்படுத்தி முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின் ஐந்து நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள அழுக்கு (dirt) நீங்கி, சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படும்.
Next step: 2
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்து, பின் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
பின் ஐந்து நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள அழுக்கு நீங்கும்.
மேலும் உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி, சி போன்ற சத்துக்கள் இறந்த செல்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதால் சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும்.
Next step: 3
ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜூஸ் மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் (Glycerine) இவை மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள் இப்பொழுது face massage cream தயார்.
இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் ஐந்து நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும், இவ்வாறு மசாஜ் செய்வதினால் சரும வறட்சி நீங்கும், இதனால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.
Next step: 4
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும், அவற்றில் நான்கு ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு இவை மூன்றையும் ஒன்றாக கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள். இதனை முகத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும் பின் நன்றாக காயவிடுங்கள்.
இவ்வாறு செய்யவதினால் கரும்புள்ளிகள் மற்றும் முக கருமை நீங்கும்.
(குறிப்பு: இந்த ஸ்டேப் செய்த பின் முகத்தை கழுவ வேண்டாம்.. ஸ்டேப் 5-ஐ தொடர்தியாக செய்யுங்கள்)
Last step: 5
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் 1/2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், சந்தனம் பவுடர் அல்லது முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் மற்றும் இரண்டு ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
பின் இரண்டு காட்டன் பெட் (cotton pads) எடுத்து கொள்ளுங்கள் அவற்றை உருளைக்கிழங்கு ஜூஸில் நனைத்து இரு கண்களையும் மூடி பெடினை கண்களில் வைத்து கொள்ளுங்கள். பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருந்து பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த ஐந்து (Potato juice for face in tamil) முறையினையும் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதால் வாரத்தில் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து வரலாம். இதனால் சருமம் பொலிவுடனும், புத்துணர்ச்சியாகவும் காணப்படும்.