தேவையான பொருட்கள் :
கம்பு ரவை – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
வரமிளகாய் – 2
இஞ்சி – சிறிது
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிதளவு
கேரட் – 1
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கம்பு ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
பின் அதில் பொருங்காயத்தூளை தூவி வரமிளகாயை கிள்ளிப் போட்டு இஞ்சியை தட்டிப் போட்டு ஒரு முறை கிளற வேண்டும்.
அடுத்து அதில் வெங்காயம், கேரட் துருவல் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் கேரட் துருவல் நன்றாக வதங்கியதும் பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் கொதித்ததும் அதில் கம்பு ரவையை சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைக்கவும்.
பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல் தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கிவிட வேண்டும்.
இப்போது சுவையான கம்பு ரவை உப்புமா ரெடி!!!
இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.