முக கருமை நீங்க தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – சிறிதளவு
- தயிர் – 1 ஸ்பூன்
- ஆரஞ்ச் சாறு – 1 ஸ்பூன்
- எலுமிச்சை – 1/2 நறுக்கியது
செய்முறை விளக்கம்:
முதலில் 1 பவுலில் கடலை மாவு சிறிதளவு சேர்க்க வேண்டும். கடலை மாவுடன் தயிர் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன்ஆரஞ்ச் சாறு 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த கலவையுடன் எலுமிச்சை ஒன்றை நறுக்கி முகத்தில் கருமை உள்ள இடத்தில் இந்த கலவையை 5 நிமிடம் தடவி வர வேண்டும். முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்த பின்னர் நீரால் முகத்தை கழுவி கொள்ளலாம். முகம் கருமையாக இருக்கிறது என்ற கவலையே வேண்டாம். இந்த டிப்ஸை எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நல்ல மாற்றம் கிடைக்கும்.
குறிப்பு 1:
நமது சருமத்தில் கடலை மாவு பயன்படுத்துவதினால் முகத்தில் இருக்கும் டாக்சின்ஸ்களை அகற்றி முகத்தை எப்போதும் வெள்ளையாக வைத்திருக்கும்.
குறிப்பு 2:
தயிரில் சிங்க் மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இதனால் வெயிலில் சென்று வந்தால் முகத்தில் ஏற்படும் கருமை பிரச்சனையை குறைக்கும் தன்மை பெற்றது.
குறிப்பு 3:
ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சையில் அதிகமாக சிட்ரஸ் இருக்கிறது. இந்த இரண்டிலும் வைட்டமின் சி சத்துகள் அடங்கியுள்ளது. வெயிலில் சென்று வருவதினால் கருமை பிரச்சனையை முற்றிலுமாய் குறைத்து விடும்.