யாரெல்லாம் கண்டிப்பாக நடைபயிற்சி செய்ய வேண்டும்?

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கடற்கரைகள், பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் மரங்கள் உள்ள இடங்களில் நடப்பது நல்லது. அதிகாலையில் நடக்கிறவர்கள் அரை லிட்டர் தண்ணீர் குடித்து விட்டு நடக்க ஆரம்பிக்கலாம். உகந்த ஆடைகளை அணிந்துகொண்டு, இரு கைகளையும் வீசியபடி, நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கி பார்த்தபடி நடக்க வேண்டும்.

சிறுபிள்ளைகளில் இருந்து பெரியவர்கள் வரை நடக்கலாம். இன்றைக்கு குழந்தைகளை அடுக்குமாடி கட்டிடங்களில் அடைத்து வைத்து பாடம் நடத்துவதால், அவர்களுக்கு ஓடியாடி விளையாடக்கூடிய வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. எனவே சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடைபயிற்சி செய்வது நல்லது.

அதிலும் குறிப்பாக உடலுழைப்பு இல்லாதவர்கள், அலுவலகங்களில் அமர்ந்து வேலை செய்கிறவர்கள், மூளைக்கு வேலை கொடுக்கிறவர்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக நடைபயிற்சி செய்ய வேண்டும்.

அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையுள்ள நேரமே நடப்பதற்கு மிக மிக உகந்த நேரமாகும். ஏனெனில் அந்த நேரத்தில் தான் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். மேலும் அப்போது நம் நுரையீரல் நன்றாக வேலை செய்யும். அதிகாலை 5 மணிக்குள் நடக்க முடியாதவர்கள் 5-6 மணிக்குள் நடக்கலாம். காலையில் நடக்க முடியாதவர்கள் மாலை 6-7 மணிக்குள் நடக்கலாம். தினமும் 45 நிமிடங்கள் நடந்தால் போதுமானது.

நடைபயிற்சி செய்வதால் உடலின் உள் உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக கிடைக்கும். உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால் உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. நரம்பு மண்டலம் வலுவடைகிறது. எலும்புகளுக்கு உறுதி கிடைக்கிறது. இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் உள்ள ஊளைச்சதைகள் கரைகிறது. ஹார்மோன்கள் சீராக சுரக்கவும், மூளையின் செயல்பாடுகள் மேம்படவும் உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கெட்டக்கொழுப்பின் அளவு குறைகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நடைபயிற்சியாளர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் அபாயம் குறைவு. நடைபயிற்சி செய்தால் நோய் குணமாகாது, நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். வியாதி இல்லாதவர்கள் நடக்கும் போது வியாதி வராமல் தடுக்கப்படுகிறது. 

Related Posts

Leave a Comment

Translate »