குழந்தைகளுக்கு சத்தான பூரி செய்து கொடுக்க விரும்பினால் கேழ்வரகு மசாலா பூரி செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – 2 கப்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
ரவை – ஒரு டீஸ்பூன்
ப.மிளகாய் – 3
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் ரவையை உப்பு சேர்த்து அரைக்கவும்.
அதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, சேர்த்துக் கலந்து ப.மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
பிசைந்த மாவை பூரிகளாக தேய்த்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான கேழ்வரகு மசாலா பூரி ரெடி.