தேவையான பொருட்கள் :
ராகி (கேழ்வரகு) – 100 கிராம்
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 50 கிராம்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
பெரிய வெங்காயம் – ஒன்று
கடுகு – ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
முருங்கை இலை – சிறிதளவு.
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேழ்வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
அதனுடன் சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றித் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிடவும்.
சூப்பான சத்தான கேழ்வரகு – பருப்பு அடை ரெடி.