கர்ப்ப காலத்தில் நடைப்பயிற்சி செய்தால் இந்த பிரச்சனைகள் தீருமா?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கர்ப்பகாலத்தில் வயிற்றில் இருக்கும் சிசு வளர வளர பெண்கள் சற்று சிரமங்களை உணருவார்கள். உட்காரும் போதும், நிற்கும் போதும், படுக்கும் போதும் இதை எளிதாக உணர்வார்கள். இவை தொடரும் போது சோர்வும் அதிகரிக்கும். ஆனால் நடைபயிற்சியின் மூலம் தசைகள் இலகுவாகும் தன்மை பெறுவாதால் உடலில் இந்த மாற்றத்தை எளிதாக கையாள்வார்கள்.

உடலில் சிசு அசையும் போது ஆங்காங்கே உறுப்புகளில் வலியை உணர்வார்கள். கர்ப்பத்தின் இரண்டாவது காலகட்டத்தில் கருப்பை விரிவடைந்து குழந்தையின் எடை கூடியிருப்பதால் அதன் அழுத்தம் வலியாக முதுகிலும் பரவும். மேலும் அதிக எடை தாங்கும் கால்களிலும் வலியை உணர முடியும். இது அனைவருக்கும் உண்டாகும் என்பதால் இது குறித்து பயப்பட தேவையில்லை. ஆனால் இந்த வலிகளின் தீவிரம் அதிகரிக்காமல் இருக்க நடைபயிற்சி உதவுகிறது.

கர்ப்பிணிகள் சத்தான உணவை எடுத்துகொள்ள வேண்டும் என்றாலும் சிசுவின் வளர்ச்சியால் செரிமானப் பிரச்னைகள் அவ்வபோது உண்டாகும். இதனால் அதிக உணவு அல்லது வேளை தவறாமல் சாப்பிடுவது இயலாமல் போகலாம். ஆனால் நடைபயிற்சியை செய்யும் போது உடல் உறுப்புகள் இயங்கி செரிமானமும் எளிதாகும். இதனால் நெஞ்செரிச்சல் பிரச்னைகளிலிருந்தும் தப்பிக்கலாம்.

குழந்தையின் அசைவு மற்றும் பிரசவக்காலம் நெருங்க நெருங்க மனதில் ஒரு வித அச்சம் உண்டாவது இயற்கை. இந்த அச்சம் கர்ப்பிணிகளின் மனதில் பேறுகாலம் வரை நிரந்தரமாகும். அதனால் ஆழந்த தூக்கமும் கேள்விக்குறியாக இருக்கும். இதையும் சரிசெய்கிறது அன்றாட நடைபயிற்சி.

பேறுகாலத்தில் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்வது உடலில் அதிக எடையை உண்டாக்கிவிடும். பேறுகாலத்தில் செய்யும் உடற்பயிற்சியால உடலில் கெட்ட கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது இதனால் பிரசவத்துக்கு பிறகும் கச்சிதமான உடலை வைத்துகொள்ள முடிகிறது.

மனரீதியாக மட்டுமல்ல உடலும் இந்த பயிற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். நடைபயிற்சி செய்வதற்கு முன்பு வயிறு நிறைய இல்லாமல் கால் வயிறு உணவாவது எடுத்துக்கொள்ளுங்கள். இது சோர்வை அதிகரிக்காது. நடப்பதற்கு இலகுவான ஆடைகள், காலணிகளை அணிந்து பழகுங்கள். காற்றோட்டமான போக்குவரத்து நெரிசல் இல்லாத இடங்களை தேர்வு செய்வது மனதுக்கு இதமாக இருக்கும். அல்லது உங்கள் வீட்டு மொட்டைமாடியிலும் நடக்கலாம்.

மனதில் எவ்விதமான குழப்பங்களுக்கோ யோசனைகளுக்கோ இடம் கொடுக்காமல் அமைதியாக வைத்துகொள்வதன் மூலம் நடைபயிற்சியின் பலனை முழுமையாக பெறலாம் என்கிறார்கள் மருத்துவர்களும். பயிற்சியில் ஈடுபாடு கொண்டிருக்கும் பெண்கள் யோகா வல்லுநர்களின் உதவியோடு யோகா பயிற்சியும் செய்யலாம்.

ஆரோக்கியம் என்பது உண்ணும் உணவில் மட்டுமல்ல உடற்பயிற்சியிலும் உண்டு. அதை உணர்ந்து கடினமாக உடலை வருத்தி செய்யாவிட்டாலும் இலகுவான நடைபயிற்சியை மேற்கொள்வது பிரசவகாலத்தில் பதட்டமின்றி வைத்திருக்கும்.

Related Posts

Leave a Comment

Translate »