தேவையான பொருட்கள் :
இட்லி – 5
ரசம் வைக்க :
தனியா – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – 6
துவரம்பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – சிறிதளவு
தக்காளி – 1/2 கப்
புளி தண்ணீர் – 1/4 கப்
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
பெருங்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
உப்பு – தே. அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.
தனியா, காய்ந்த மிளகாய், மிளகு , துவரம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் ஆகியவற்றை கடாயில் வறுத்து ஆற வையுங்கள். பின் மிக்ஸியில் நைசாக பொடித்து கொள்ளவும்.
அடுத்து தக்காளியை கைகளால் நன்றாக மசித்து அதனுடன் புளித் தண்ணீர் சேர்த்து பொடியாக்கி வைத்துள்ள ரசப் பொடி, உப்பு சேர்த்து கலக்குங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்த பின்னர் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு பெருங்காயப் பொடி சேர்த்து, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்து அதை கலக்கி வைத்துள்ள ரசத்தில் ஊற்றுங்கள்.
அடுப்பில் ரசக் கலவையை வைத்து சிறு தீயில் வையுங்கள். கொதிநிலை வந்ததும் இறக்கிவிடுங்கள். ரசம் தயார்.
பரிமாறும்போது இட்லி வைத்து அதன் மேல் ரசம் ஊற்றி மேலே சிறிது கொத்தமல்லி, காராபூந்தி தூவி கொடுங்கள்.
அருமையாக இருக்கும் இந்த ரசம் இட்லி.