தேவையான பொருட்கள்
கம்பு சேமியா – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கிராம்பு – 5
கறிவேப்பிலை – சிறிதளவு
பட்டை – 1 இன்ச் அளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கேரட் – 100 கிராம்
ஃப்ரஷ் பட்டாணி – 50 கிராம்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சேமியாவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை மிளகு சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு இதனைத் தனியே எடுத்து வைக்கவும்.
கடாயில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து சுமார் 5 கப் தண்ணீர் அதனுடன் போதுமான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சேமியாவைச் சேர்த்து வேக
வெந்த சேமியா ஒன்றோடு ஒன்றாக ஒட்டக்கூடாது உடையவும் கூடாது. சேமியா வெந்தவுடன் உதிர்த்து வைக்கவும்.
வதக்கிய கலவையுடன் சேமியாவைச் சேர்த்து நன்கு பிரட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சத்தான கம்பு சேமியா கேரட் புலாவ் தயார்.