சத்தான ஸ்நாக்ஸ் சிறுகீரை கட்லெட்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

சிறுகீரை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)
உருளைக்கிழங்கு – 3
பொடித்த வேர்க்கடலை – 3 டேபிள்ஸ்பூன்
வறுத்துப் பொடித்த அவல் – 3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
பிரெட் துண்டுகள் – 3
சோள மாவு – இரண்டு டீஸ்பூன்
எண்ணெய் உப்பு – தேவையான அளவு.

சிறுகீரை கட்லெட்

செய்முறை:

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

பிரெட் ஓரங்களை எடுத்து விட்டு தண்ணீரில் நனைத்த பின்னர் தண்ணீரை நன்றாக பிழிந்து விட்டு வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கீரையை போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, பொடித்த வேர்க்கடலை, இஞ்சி – பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், உப்பு, பிரெட் சேர்த்து நன்றாக பிசையவும்.

பிசைந்து வைத்த கலவையிருந்து சிறிது எடுத்து கட்லெட்டுகளாக தட்டி சோள மாவு கரைசல் முக்கி எடுத்து அவல் பொடியில் புரட்டி வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான சத்தான சிறுகீரை கட்லெட் ரெடி. 

Related Posts

Leave a Comment

Translate »