தேவையான பொருட்கள் :
சோம்பு கீரை – 2 கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
துருவிய தேங்காய் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
சோம்பு கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில்ல நறுக்கி வைத்துள்ள சோம்பு கீரையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
கீரை நன்கு வெந்தவுடன் அதனுடன் சிறிது துருவிய தேங்காய் போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.
சத்தான சோம்பு கீரை பொரியல் தயார்.