வட இந்திய ஸ்பெஷல் குஜியா

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

மைதா மாவு –   125 கிராம்

நெய் – 30 கிராம்
சர்க்கரை – 75 கிராம் தூள்
கொப்பரைத் தேங்காய் – 75 கிராம்
தேங்காய் -75 கிராம்
பிஸ்தா – தேவையான அளவு
பாதாம் – தேவையான அளவு
சேமியா – 30 கிராம்
சிரோஞ்சி (Chironji) – தேவையான அளவு
குங்குமப்பூ – தேவையான அளவு
பொடியாக்கப்பட்ட ஏலக்காய் – தேவையான அளவு

குஜியா

செய்முறை

பாதாமை துருவிக்கொள்ளவும்.

ஒரு பேனில் நெய் சேர்த்து சேமியாவை சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.

அடுத்து அதில் கொப்பரைத் தேங்காய், துருவிய பாதாம், பிஸ்தா, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலக்கவும்.

ஒரு பவுலில் மைதா மாவு சேர்த்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நல்லா கலந்து விட்டுக்கோங்க. அப்பறமா இந்த மாவில் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதம் வரும் வரை பிசைஞ்சுக்கோங்க. மாவு ரெடியானதும் அதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே வெச்சிடுங்க.

வறுத்த சேமியா இருக்கும் கடாயில் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து வறுத்த மாவாவையும் சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்துக்கோங்க.

மாவை உருண்டைகளாக உருட்டிக்கொண்டு மெல்லிய சப்பாத்திக்களா திரட்டிக்கோங்க.

இப்போ அதை குஜியா மேக்கர் மோல்டில் போட்டு சப்பாத்திகளையும் ஃபில்லிங்கையும் வைச்சு மூடுங்க. குஜியாவோட ஓரங்கள் ஈரமா இருக்கான்னு பார்த்துக்கோங்க. அப்பதான் ஃபில்லிங் நல்லா மூடி வெளியே வராம இருக்கும்.

அதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்க அவ்வளவு தாங்க.

சுவையான குஜியா சாப்பிடுவதற்கு தயார்.

Related Posts

Leave a Comment

Translate »