குழந்தையின் இந்த பழக்கத்தை நிறுத்துவது எப்படி தெரியுமா?

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

குழந்தைகள் வாயில் விரலை வைப்பது இயல்பானது. சில குழந்தைகள் அசதியாக இருக்கும் போது, பய உணர்ச்சி இருக்கும் போதும் வாயில் விரல் வைப்பதை வழக்கமாக கொள்கிறது. பிறந்த குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு வாயில் விரல்களை வைத்து சூப்புவார்கள். சில குழந்தைகள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று விரல்களை கூட வாயில் வைத்து கொள்ளும். பிறந்து ஆறுமாதங்கள் வரை சரி அதன் பிறகும் இதை தொடர்ந்தால் பல் முளைக்கும் போது அது முன்னோக்கி முளைத்துவிடும் என்று சொல்வார்கள். இந்த பழக்கத்தை எப்படி தவிர்ப்பது.

சிலர் குழந்தை விரல் சூப்புவதை நிறுத்த குழந்தையின் வாயில் எப்போதும் தேன் நிரப்பிய நிப்பிளை வாயில் வைத்துவிடுவார்கள். இவை குழந்தைக்கு கெடுதலையே உண்டாக்கும். அதனால் இயன்ற வரை குழந்தையின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் இதை தடுக்க முடியும். தொடர்ந்து குழந்தையை கண்காணிப்பதன் மூலம் இந்த பழக்கத்தை ஒரு மாதத்தில் தடுத்துநிறுத்திவிடமுடியும்.

சில குழந்தைகள் சற்று விபரம் தெரிந்த பிறகு வாயில் இருக்கும் விரல்களை எடுத்துவிட்டால் அழத்தொடங்கும். இதனால் அம்மாக்கள் அப்படியே விட்டுவிடுவார்கள். நீங்கள் எளிதாக ஒன்றை செய்யலாம். குழந்தை எந்த விரலை வாயில் வைக்கிறதோ அந்த விரலை வேப்பிலை சாறால் நனைக்க வேண்டும்.

வேப்பிலையை அரைத்து அப்படியே குழந்தையின் விரலில் தடவினால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும். மாறாக வேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து சிறிது நீர் சேர்த்து அரைத்து அந்த சாறை குழந்தையின் விரலில் பூச வேண்டும். கவனம் வேப்பிலையும், பயன்படுத்தும் நீரும் சுத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தை விரலை வாயில் வைக்கும் போது அவை உள்ளுக்குள் போக வாய்ப்புண்டு.இதை குழந்தை வாயில் விரல்வைக்கும் போதெல்லாம் தடவினால் போதும். 3 மணி நேரமாவது கசப்பு இருக்கும்.

எலுமிச்சையின் சாறை எடுத்து வைத்துகொள்ளலாம். இதை குழந்தையின் விரலில் தடவினால் குழந்தை எலுமிச்சையின் புளிப்பு சுவையை விரும்பாமல் விரல் வைப்பதை தவிர்க்கும். எலுமிச்சை சிட்ரஸ் நிறைந்தது என்பதால் குழந்தையின் பட்டுப்போன்ற மென்மையான சருமத்தை பதம் பார்க்கும் என்பதால் சம அளவு நீர் சேர்த்து விரலை தேய்த்துவிடுங்கள். அவை உள்ளே சென்றாலும் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி தான். ஆனால் இரவு நேரங்களில் எலுமிச்சை சாறு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

குழந்தைகளின் விரல்களை சுற்றி சுத்தமான துணியை கொண்டு இறுக்கமில்லாமல் மென்மையாக கட்ட வேண்டும். 5 முதல் சுற்று வரை சுற்றி கட்டுவதன் மூலம் குழந்தை விரலை வாயில் வைத்ததும் எடுத்துவிடும்.

சுத்தமான துணியாக பயன்படுத்த வேண்டும். அதே போன்று நாள் முழுக்க துணியை விரல்களில் சுற்றியும் வைக்க கூடாது. அப்ப்டி செய்தால் குழந்தையின் விரலில் ரத்தகட்டுகள் உண்டாகும், சருமம் தடித்துவிடும். அவ்வபோது துணியை எடுத்து விட வேண்டும். இரவு நேரங்களில் சுற்றி விடவேண்டும். தற்போது குழந்தையின் கைகளில் மாட்டி விட கிளவுஸ் கிடைக்கிறது. அதையும் பயன்படுத்தலாம். எனினும் சுத்தமான துணியை பயன்படுத்துவது நல்லது.

வசம்பை குழைத்து அதை விரல்களில் தடவுவதுண்டு ஆனால் வசம்பு அதிகமாக உள்ளே சென்றால் குழந்தைக்கு பேச்சுத்திறன் சற்று குறைபடும். அதனால் வசம்பை அதிகம் பயன்படுத்த வேண்டாம். வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் போதுமானது.கிராம்பு எண்ணெய் தரமான எண்ணெய் வாங்கி அதை விரல் முழுக்க தடவலாம். இந்த எண்ணெய் குழந்தையின் வயிற்றுக்குள் போனாலும் அவை குழந்தையின் செரிமான சக்தியை அதிகரிக்க செய்யும்.

முன்பு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட விளக்கெண்ணெய் தயாரித்தார்கள். தரமான எண்ணெயாக இருந்தாலும் விளக்கெண்ணெய் வயிற்றுப்போக்கை தரக்கூடியது. ஆனால் இதை ஒருமுறைஇலேசாக தடவினாலே அந்த வாடை மீண்டும் குழந்தையை குளிப்பாட்டும் வரை இருக்கும் என்பதால் பலன் நன்றாகவே கிடைக்கும்.

அதே நேரம் குழந்தையின் விரல்களையும், நகங்களையும் சுத்தமாக வைத்திருப்பதையும் மறக்க வேண்டாம். பெரும்பாலும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வருவதற்கு காரணம் விரல்கள் வழியாக உள்ளே செல்லும் கிருமிகள் தான். குழந்தை வாயில் விரல் வைப்பதை தவிர்க்க இந்த வழிகளில் ஒவ்வொன்றையும் மாறி மாறி கடைபிடிக்கலாம். நிச்சயம் பலன் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment

Translate »