தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை – 200 கிராம்
கேரட் – 1
பீன்ஸ் – 10
குடைமிளகாய் – 1
நெய் – 2 டீஸ்பூன்
புதினா – கால் கட்டு
பச்சை மிளகாய் – 2
உப்பு – சிறிதளவு.

செய்முறை:
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
பீன்ஸ், குடை மிளகாய், ப.மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருட்டி வைத்த உருண்டைகளை நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
சத்தான சுவையான கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை ரெடி.