காலையில் எந்த வகையான உணவை சாப்பிடலாம்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

காலை உணவில் சிலவற்றினை எடுத்துக்கொள்வதும் சிலவற்றினை தவிர்ப்பதும் உடல் நலத்திற்கு நல்லது அவற்றில் சில…

காலை உணவில் ஜூஸ் அருந்துவது பலருக்கு எளிதாக இருக்கின்றது. அதுவும் ரெடிமேடாக வாங்கப்படும் ஜூஸ் இன்னமும் எளிதாக இருக்கின்றது. இதனை தவிர்த்து பழங்களை வெட்டி சில துண்டுகள் காலை உணவில் எடுத்துக்கொள்வது நார்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் இவை நன்கு கிடைக்கச்செய்யும். வேண்டுமெனில் காய்கறி ஜூஸ் செய்து குடிக்கலாம்.

ஓட்ஸ் கார்போஹைட்டிரேட், புரதசத்து கொண்டது. உடனடி சக்தியும் நீண்ட நேர சக்தியும் கொடுக்கக்கூடியது. நார்சத்து கொண்டது. அதனால் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். ஜீரண சக்தி சீராய் இருக்கும்.

உங்களுக்கு அசிடிடி பிரச்சினை, வயிற்றில் புண், போன்ற பிரச்சினைகள் இருந்தால் காலை உணவில் சமைக்காத தக்காளியினை தவிர்த்து விட வேண்டும். இல்லையெனில் இது அசிடிடியினை அதிகரிக்கச்செய்யும்.

முட்டை சிறந்த புரதம், நல்ல கொழுப்பு கொண்டது. நன்கு சக்தி அளிக்கக் கூடியது. காலை உணவிற்கு சிறந்தது.

தர்பூசணி சிறந்த பழ உணவு. உடலுக்கு தேவையான நீர்சத்து தருவதோடு நச்சு நீக்குதல், புற்று நோய், இதய நோய், சர்க்கரை நோய் இவற்றில் இருந்து காத்தல் போன்றவற்றுக்கு தர்பூசணி சிறந்த உணவாக அமையும்.

காலையில் டீ, காபி தவிர்ப்பது நல்லது. இதனை காலை உணவிற்கு பின்பு எடுத்துக்கொள்ளலாம்.

சிறிது பாதாம் போன்ற கொட்டை வகைகளை காலை உணவிற்கோ அல்லது 11 மணி உணவிற்கோ எடுத்துக் கொள்வது சிறந்த புரதத்தினை அளிக்கும்.

* அதிகம் சர்க்கரை கலந்த உணவினை தவிர்த்து விட வேண்டும்.

* பப்பாளி பழம் காலை உணவில் சேர்த்துக் கொள்ள சிறந்தது.

* கேக் போன்ற உணவுகளை தவிர்த்து விட வேண்டும்

* முழு தானிய உணவுகள் நல்லது.

* தயிர் மிகவும் நல்லது. புரதம் நிறைந்தது. ஜீரணத்திற்கு உதவுவது. இதில் பழங்கள். கொட்டைகள் சேர்த்து உண்ணலாம்.

Related Posts

Leave a Comment

Translate »