சூப்பரான ஸ்நாக்ஸ் கேக் பாப்ஸ்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

சாக்லேட் ஸ்பான்ஞ் –     1 Numbers
சாக்லேட் சிரப் –     1/2 கப்
கேக் கிரீம் –     3 தேக்கரண்டி
தூளாக்கப்பட்ட முழு கோதுமை பிஸ்கட் –     2 Numbers
சாக்லேட் சிப்ஸ் –     தேவையான அளவு
வண்ணமயமான தெளிப்பான் –     தேவையான அளவு

கேக் பாப்ஸ்

செய்முறை

கேக் கிரீமை நன்றாக  அடித்து கொள்ளவும்.

கோதுமை பிஸ்கட்டை தூளாக்கி கொள்ளவும்.

சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை தூளாக நொறுக்கி கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் தூளாக்கிய சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை போட்டு அதனுடன் அடித்த க்ரீம், பவுடராக்கிய பிஸ்கட் தூள் சேர்த்து மாவு மாதிரி பிசைந்து கொள்ளுங்கள்.

மாவு உலர்ந்த தன்மையில் இருந்தால் கூட கொஞ்சம் க்ரீம் சேர்த்து கொள்ளுங்கள்.

இப்பொழுது பிசைந்த மாவை சிறு சிறு பந்துகளாக உருட்டி ஒரமாக வையுங்கள். இப்பொழுது லாலி பாப் ஸ்டிக்கை எடுத்து அந்த பந்தில் சொருகி உருக்கிய சாக்லேட்டில் முக்கி எடுங்கள்.

இப்பொழுது குளிரூட்டிய சாக்லேட் ஸ்டிக்கை எடுத்து மறுபடியும் மெல்ட்டடு சாக்லேட்டில் முக்கி அதன் மேல் கலர்புல்லான ஸ்பிரிங்கிள்ஸ்ஸை தூவுங்கள்.

பிறகு அப்படியே அதை ஒரு தட்டில் வைத்தோ அல்லது அழகாக பர்த்டே டேபிளில் வரிசையாக குத்தி வைத்தோ அழகுபடுத்துங்கள்.

டேஸ்டியான கேக் பாப்ஸ் லாலிபாப் ரெடி. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Related Posts

Leave a Comment

Translate »