மீல்மேக்கர் வைத்து பிரியாணி செய்யலாம் வாங்க

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்
மீல்மேக்கர் – 1 கப்
உப்பு – தேவைக்கு
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
பட்டை தூள் கிராம்புத் தூள் சோம்பு தூள் – தலா 1/4 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – சிறிது
புதினா கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி
நெய் + எண்ணெய் – 2 டேபிஸ்பூன்.

மீல்மேக்கர் பிரியாணி

செய்முறை

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு மீல்மேக்கர் அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி.

வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

Related Posts

Leave a Comment

Translate »